இந்தியாவில் மொத்தம் இத்தனை வந்தே பாரத் ரயில்களா? எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம்?.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் மொத்தம் எத்தனை வந்தே பாரத் ரயில்கள் இதுவரை இருக்கின்றன என தெரியுமா. அவை எந்தெந்த வழித்தடங்களழில் இயங்குகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

வந்தே பாரத் ரயில்களானது இந்தியாவில் முழுக்க முழுக்க தயாரிக்கப்படுகிறது. இதன் சிறப்பே என்ஜினுக்கு என தனிப்பெட்டி இல்லாததுதான். இந்த ரயில்கள் தமிழகத்தில் சென்னையை அடுத்த பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் தொடங்கப்படுகிறது. இந்த ரயிலில் பாதுகாப்பு, வேகம், சொகுசான பயணம் இருப்பதால் மக்கள் இதை விரும்புகிறார்கள்.

Do you know the 25 vande bharat express trains in india?

இந்த ரயில்கள் 2018 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனால் இதை train 18 என அழைக்கிறார்கள். இன்றைய தினம் மொத்தம் 9 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

அவை என்னென்ன வழித்தடங்கள் என்பதை பார்ப்போம்.

  • பெங்களூர் (யஸ்வந்த்பூர்) - ஹைதராபாத் (கச்சிகுடா)
  • நெல்லை- சென்னை எழும்பூர்
  • காசர்கோடு- திருவனந்தபுரம் (வழி ஆலப்புழா)
  • விஜயவாடா - சென்னை சென்ட்ரல்
  • புரி- ரூர்கேலா,
  • உதய்பூர்- ஜெய்ப்பூர்
  • பாட்னா- ஹவுரா
  • ராஞ்சி டூ ஹவுரா
  • ஜாம்நகர்- ஆமதாபாத் (சபர்மதி)

இந்த புதிய 9 ரயில்களை சேர்த்தால் இந்தியாவில் மொத்தம் 34 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஏற்கெனவே பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 25 ரயில்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  1. டெல்லி- வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - இதுதான் முதல் வந்தே பாரத் ரயில். இந்த ரயில் 2019ஆம் ஆண்டு தொடங்கியது. வியாழக்கிழமையை தவிர 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் டெல்லியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு வாரணாசியை மதியம் 2 மணிக்கு சென்றடையும். இதன் மொத்த தூரம் 759 கி.மீ. ஆகும்.
  2. டெல்லி- வைஷ்ணவி தேவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்- இந்த ரயிலானது டெல்லியிலிருந்து வைஷ்ணவி தேவி மலையடிவாரம் வரை செல்கிறது. இதன் பயண நேரம் 8 மணிநேரமாகும். இந்த ரயில் செவ்வாய்க்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் இயங்குகிரது. இது டெல்லியிலிருந்து 6 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவைஷ்ணவி தேவி மலையடிவாரத்தை மதியம் 2 மணிக்கு சென்றடைகிறது.
  3. காந்திநகர்- மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்- ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் இயங்குகிறது. மும்பையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயிலானது காந்தி நகருக்கு மதியம் 12.25 மணிக்கு வந்தடைகிறது. இதன் தூரம் 522 கி.மீ. ஆகும்.
  4. டெல்லி- அம்ப் அன்தாரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்- இந்த ரயிலானது வெள்ளிக்கிழமையை தவிர மற்ற நாட்களில் இயங்குகிறது. டெல்லியிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு 11.05 மணிக்கு அம்ப் அன்தாராவை அடைகிறது.
  5. சென்னை- மைசூர் எக்ஸ்பிரஸ்- புதன்கிழமையை தவிர மற்ற நாட்களில் இயங்கும். சென்னையிலிருந்து 5.50 மணிக்கு காலை புறப்பட்டு மைசூரை மதியம் 12.20 மணிக்கு சென்றடைகிறது. மொத்தம் 401 கி.மீ. தூரத்தை கடக்கிறது. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
  6. நாக்பூர்- பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்- மகாராஷ்டிராவின் நாக்பூரிலிருந்து சத்தீஸ்பூரில் உள்ள பிலாஸ்பூருக்கு செல்கிறது. சனிக்கிழமைகளை தவிர மற்ற 6 நாட்கள் இயங்குகிறது. நாக்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு பிலாஸ்பூருக்கு இரவு 7.35 மணிக்கு செல்கிறது.
  7. ஹவுரா- நியூ ஜல்பைகுரி வந்தே பார்த்- புதன்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயங்கும். இந்த ரயிலானது ஹவுராவில் காலை 5.55 மணிக்கு புறப்பட்டு நியூ ஜல்பைகுரியை மதியம் 1.25 மணிக்கு சென்றடைகிறது. இதன் பயண தூரம் 454 கி.மீ. ஆகும். பயண நேரம் 7 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.
  8. செகந்திராபாத்- விசாகப்பட்டினம் வந்தே பாரத் எக்ஸ்பிரல்- இந்த ரயிலானது தெலுங்கானாவின் செகந்திராபாத்திலிருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு செல்கிறது. செகந்திராபாத் சந்திப்பிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை 11.30 மணிக்கு சென்றடைகிறது.
  9. மும்பை- சோலாப்பூர் வந்தே பாரத்- இந்த வந்தே பாரத் ரயிலானது புதன்கிழமையை தவிர மற்ற நாட்களில் இயங்குகிறது. மும்பை சத்திரபதி சிவாஜி முனையத்திலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு சோலாப்பூரை 10.40 மணிக்கு சென்றடைகிறது. இதன் பயண நேரம் 6 மணி நேரம் 35 நிமிடங்களாகும்.
  10. மும்பை- ஷீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்- இந்த ரயிலின் பயண நேரம் 5 மணி நேரம் 20 நிமிடங்களாகும். மும்பையிலிருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு ஷீரடியை காலை 11.40 மணிக்கு அடைகிறது. இந்த ரயிலானது செவ்வாய்க்கிழமையை தவிர மற்ற நாட்களில் இயங்குகிறது.
  11. ஹஸ்ரத் நிஜாமுதீன்- ராணி கமல்பட்டி நிலைய வந்தே பாரத் ரயில்- போபாலின் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. டெல்லி ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில் அரை மணி நேரம் மிச்சப்படுத்த ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தின் தூரம் 700 கி.மீ. பயண நேரம் 7 மணி நேரம் 45 நிமிடங்களாகும். இது சனிக்கிழமையை தவிர மற்ற 6 நாட்களில் இயங்குகிறது. போபாலில் காலை 5.55 மணிக்கு புறப்பட்டு டெல்லியை மதியம் 1.45 மணிக்கு சென்றடையும்.
  12. செகந்திரபாத்- திருப்பதி வந்தே பாரத்- 660 கி.மீ. தூரத்தை 8 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கிறது. செகந்திராபாத்திலிருந்து 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருப்பதியை மதியம் 2.30 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயிலானது செவ்வாய்க்கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் இயங்குகிறது.
  13. சென்னை- கோவை வந்தே பாரத்- இந்த ரயிலின் பயண தூரம் 495 கி.மீ. ஆகும். இது 6 மணிநேரம் 10 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கிறது. புதன்கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் இயங்கும். கோவையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை மதியம் 12.10 க்கு வந்தடைகிறது.
  14. அஜ்மீர்- டெல்லி கன்டோன்மென்ட் எக்ஸ்பிரஸ்- இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயிலானது ஜெய்ப்பூர், ஆல்வார் மற்றும் குர்கானில் நிறுத்தப்படுகிறது. அஜ்மீர்- டெல்லி கன்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ரயிலானது ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் ரயிலாகும்.
  15. ஹவுரா- புரி - ஹவுரா எக்ஸ்பிரஸ்- ஒடிஸாவின் முதல் வந்தே பாரத் ரயில் மேற்கு வங்கத்தின் ஹவுராவிலிருந்து புனித நகரமான புரி வரை இயக்கப்படுகிறது.இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து இது இந்தியாவின் முன்னேற்றத்தின் சின்னம் என்றார்.
  16. திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்- கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இது திருவனந்தபுரத்திலிருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு காசர்கோட்டை மதியம் 1.25 மணிக்கு வந்தடைகிறது. வியாழக்கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் இயங்கும்.
  17. நியூ ஜல்பைகுரியிலிருந்து குவாஹாத்தி வரை இயங்கும் வந்தே பாரத்- இந்த ரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயங்குகிறது. இதன் பயண தூரம் 410 கி.மீ., பயண நேரம் - 6 மணி நேரம் ஆகும்.சிலிகுரியில் உள்ள நியூ ஜல்பைகுரியில் புறப்பட்டு அஸ்ஸாமின் குவாஹாத்தியை வந்தடைகிறது.
  18. டெல்லி- டேராடூன் எக்ஸ்பிரஸ்- இந்த ரயில் மே மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. இதன் பயண நேரம் 4 மணி நேரம் 45 நிமிடங்களாகும். இரு ரயில்களும் 302 கி.மீ. தூரத்தை அடைகிறது. புதன்கிழமையை தவிர மற்ற எல்லா நாட்களும் இயங்குகிறது.
  19. கோரக்பூர்- லக்னோ வந்தே பாரத்- இந்த வழித்தடத்தில் 302 கி.மீ .தூரத்தை கடக்கிறது. பயண நேரம் 4 மணி நேரமாகும். ஜூலை 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
  20. ஜோத்பூர்- சபர்மதி வந்தே பாரத்- இந்த ரயில் ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் வரை இயக்கப்படுகிறது. பாலி, அபு சாலை, பலன்பூர், மேஹ்சானா ஆகிய பகுதிகள் வழியாக செல்கிறது.
  21. மும்பை- கோவா வந்தே பாரத்- மும்பையின் சத்திரபதி சிவாஜி முனையத்திலிருந்து கோவாவின் மத்கான் ரயில் நிலையம் வரை செல்கிறது.
  22. காசர்கோடு- திருவனந்தபுரம்- இந்த ரயிலில் 183 சதவீம் பேர் சராசரியாக பயணிக்கிறார்கள் என இந்திய ரயில்வே தெரிவிக்கிறது.
  23. பெங்களூர் - தர்வாத் வந்தே பாரத்- இந்த சிறப்பு ரயில் ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது.
  24. இந்தூர்- போபால் ரயில்- மத்திய பிரதேசத்தில் ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது. 6 நாட்கள் இயங்குகிரது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்காது.
  25. ராணி கம்லாபட்டி- ஜபல்பூர் வந்தே பாரத்- ஜபல்பூரின் மஹாகவுசல் பகுதியிலிருந்து மத்திய பிரதேசத்தின் போபால் வரை செல்கிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+