முக்கோண வடிவத்தில் அமைந்த புதிய நாடாளுமன்றம்.. இதன் சிறப்புகள்.. 3 வாசல்களின் பெயர்கள் தெரியுமா?
டெல்லி : புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான வாயில்களுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா? அவற்றின் அருகில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் என்னென்ன?
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு ஆதீனங்களால் வழங்கப்பட்ட செங்கோலை நிறுவினார்.

சிறப்பம்சங்கள் : புதிய நாடாளுமன்றம் உருவான விதம் மற்றும் அதில் உள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்:
புதிய நாடாளுமன்ற கட்டடம் 1200 கோடி ரூபாய் செலவில், 18 ஏக்கர் அளவுக்கு அதாவது 64,500 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டடக்கலை திறன் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம், 2 ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் கட்டப்பட்டுள்ளது.
இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் மக்களவை வளாகம் விஸ்தாரமாக அமைக்கப்பட்டுள்ளது. 888 இருக்கைகள் கொண்ட மக்களவை மண்டபத்தில் மொத்தம் 1272 இருக்கைகள் வரை அமைக்கலாம். உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக இருக்கைகளில் பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள், மாற்றக்கூடிய மைக்ரோ போன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
அதிநவீன வசதிகள் : ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி வசதி உள்ளது. கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் தெளிவாகத் தெரியும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு என புதிய நாடாளுமன்றத்தில் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய பாராளுமன்றம், மத்திய விஸ்டா கட்டிடங்களின் வரிசையில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு முக்கோண அமைப்பாகும். இது மக்களவை, மாநிலங்களவை, மத்திய ஓய்வு அறை மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
புதிய லோக்சபா சேம்பர் இந்தியாவின் தேசிய பறவையான மயிலைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ராஜ்யசபா சேம்பர் தேசிய மலரான தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கோண வடிவம் : முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கடமை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கியான் துவா, சக்தி துவார், கர்ம துவார் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த 3 வாயில்களுக்கு அருகில் ஆயிரக்கணக்கான ஆண்டு இந்திய வரலாற்றை விளக்கும் வெண்கலப் படங்கள் நிறுவப்பட்டுள்ளன.
3 வாசல்கள் : அறிவு வாயில் அருகே நாளந்தாவின் உருவங்கள், மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் காட்சிகள், கர்மா வாயிலின் ஒருபுறம் கோனார்க், சக்ரா மற்றும் மறுபுறம் சர்தார், வல்லபாய் படேல், பாபாசாஹேப் அம்பேத்கார் வெண்கல சிலைகள் உள்ளன. அனைத்து மாநிலங்களின் ஓவியங்களும் சிற்பங்களும் இதில் வைக்கப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைச்சரவையின் பயன்பாட்டிற்காக 92 அறைகள் இருக்கும். புதிய கட்டிடத்தில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உள்ள ஒவ்வொரு பெஞ்சிலும் இரண்டு உறுப்பினர்கள் அருகருகே அமர முடியும். புதிய கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி அமைப்புகள் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளன. கட்டிடம் முழுவதும் 100% யுபிஎஸ் பவர் பேக்கப் வழங்கப்படுகிறது.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
"மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வருது".. லோக்சபா தொகுதி 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்.. பிளான் ரெடி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications