ஹமாஸ் பயங்கரவாதத்தை கண்டிக்காத காங்கிரஸ்! காரணம் தெரியுமா? சீக்ரெட்ஸை வெளியிட்ட அஸ்ஸாம் முதல்வர்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஏன் கண்டிக்கவில்லை என்பதற்கான காரணத்தை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இன்று 13 ஆவது நாளாக இந்த போர் நடந்து வருகிறது. காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 500 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போரில் காசாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,450 ஆக உயர்ந்துள்ளது.

பலர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றதாகவும் தெரிகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்தியா இஸ்ரேலுக்கு துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருந்தார். அதே நேரத்தில் அக்டோபர் 9ஆம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹமாஸ் அமைப்பை கண்டிக்காத காங்கிரஸ், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஏன் என்பது குறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "இந்தியா" கூட்டணியில் உள்ளவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. இந்திய மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அண்மையில் நடைபெற்றதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஹமாஸ் தாக்குதல் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நேரம் ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என பலரும் சுட்டிக் காட்டினர். ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானாவில் தேர்தல் வர இருப்பதால் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.
காரிய கமிட்டி கூட்டத்தின் உள்ளே என்ன நடந்ததோ அதைதான் நான் உங்களுக்கு சொல்கிறேன். இதைத் தொடர்ந்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் ஹமாஸ் என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தவே இல்லை. ஹமாஸை நாங்கள கண்டிக்கிறோம். அதே வேளையில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறோம் என்ற நிலையை எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்பதுதான் கவலைக்குரியதாக உள்ளது.
ஒவைசியின் வாக்கு வங்கியை கணக்கில் கொண்டுதான் ஹமாஸுடன் காங்கிரஸ் துணை நிற்கிறது. ராகுல் காந்தி வாகன ஓட்டுநர் என்பதால் அவர் ஒரு நாள் காசாவில் பைக் ஓட்டலாம் அல்லது டிராக்டரில் பயணிக்கலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எதையும் சொல்லவில்லை. பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
பாரம்பரிய காங்கிரஸ் கட்சி ஹமாஸுக்கு எதிராக கண்டனத்தை தெரிவத்திருக்க வேண்டும். இந்தியாவில் நிறைய பேர் ஹமாஸுக்கு நற்சான்று கொடுத்து வருகிறார்கள் என என்சிபி தலைவர் சரத் பவாரை மறைமுகமாக கடுமையாக விமர்சித்திருந்தார் பிஸ்வா. மேலும் அவர் கூறுகையில் இந்தியாவில் இஸ்ரேலுக்கு சிலர் கண்டனம் தெரிவிப்பதை போல் ஹமாஸ் கூட இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய தவறை அவர்கள் ஒப்புக் கொள்கிறர்கள். அவர்கள் குழந்தைகள் கடத்தி பாவம் செய்துவிட்டது அவர்களுக்கே தெரியும் என்றார் பிஸ்வா.
அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கடந்த 20
ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2015 ஆம் ஆண்டுதான் அதிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications