'கைல காசு இல்லையா,அப்போ ஆன்லைன் பேமன்ட் பண்ணுங்க..' பூம்பூம் மாட்டுக்காரரின் செம ஐடியா..வைரல் வீடியோ
டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் பேமன்ட், குறிப்பாக BHIM தொழில்நுட்பம் மூலம் பணம் அனுப்புவது எந்தளவு அதிகரித்துள்ளது என்பதை விளக்கும் வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் பேமன்ட் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஸ்மார்ட்போன் மற்றும் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் ஆன்லைன் பேமன்ட் செய்யவே விரும்புகின்றனர்.
சில்லறை பிரச்சினையைத் தவிர்கவே பெரும்பாலானோர் ஆன்லைன் பேமன்ட்டை விரும்புகின்றனர். கொரோனா காலகட்டத்தில் பணத்தால் கொரோனா பரவும் என்பதால் ஆன்லைன் பேமன்ட் அதிகரித்தது.
|
வைரல் வீடியோ
இந்தியாவில் ஆன்லைன் பேமன்ட் முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஆன்லைன் பேமன்ட் முறை எந்தளவு ஊடுருவி உள்ளது என்பதை விளக்கும் வகையிலான வீடியோ ஒன்றை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர் UPI தொழில்நுட்பத்தில் மூலம் வீடுகளில் இருந்து பணத்தை வசூலிக்கிறார். அந்த மாட்டின் தலையில் QR codeஐ கொண்ட அட்டை ஒட்டப்பட்டுள்ளது.

இன்னும் ஆதாரம் வேண்டுமா?
அதை ஸ்கேன் செய்து ஒருவர் பூம்பூம் மாட்டுக்காரருக்குப் பணம் அனுப்புகிறார். இந்த வீடியோவை பகர்ந்துள்ள ஆனந்த் மகேந்திரா, "இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குப் பெரிய அளவில் மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்பதற்கு இன்னும் ஆதாரம் வேண்டுமா?!" என ட்வீட் செய்துள்ளார். ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்வீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்தியா டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிச் செல்வதாகக் கூறி சில தரவுகளும் பகிர்ந்துள்ளனர்.

உச்சத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள்
கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் ஆஃபர்களை அள்ளிவீசியதால், இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதம் ஆன்லைன் பேமன்ட்கள் அதிகரித்தது. கடந்த மாதம் மட்டும் UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு $100 பில்லியனைத் தாண்டியது. அதாவது கடந்த மாதம் ரூ.7.71 லட்சம் கோடி UPI பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பப்பட்டன. மொத்தம் 421 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.

UPI தொழில்நுட்பம்
இந்தியாவில் இப்போது UPI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்லைன் பேமன்ட்கள் தான் பிரபலமாகி வருகிறது. இன் மூலம் ஸ்மாட்ர்போன் வைத்திருக்கும் அனைவராலும் மற்றொருவருக்குப் பணம் அனுப்ப முடியும். இந்த தொழில்நுட்பம் முதல்முறையாகக் கடந்த 2016இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2020 அக்டோபர் மாதம் ரூ. 3.86 லட்சம் கோடி UPI மூலம் அனுப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது இரட்டிப்பாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications