பணமதிப்பிழப்பு ஞாபகம் இருக்கா? அதற்கும் தற்போதைய அறிவிப்புக்கும் என்ன வித்தியாசம்
டெல்லி: கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய அறிவிப்புக்கும் தற்போது ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி திடீரென நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்ற போவதாக அறிவிப்பு வெளியானது. பிரதமர் மோடி எதுவும் பேசப்போகிறாரோ என்று உற்று நோக்கிய மக்களுக்கு பணமதிப்பிழப்பு என்ற அறிவிப்பு வெளியானது.

அதாவது அதுவரை நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததும் ஒரு நொடி மக்கள் அதிர்ந்துதான் போனார்கள். கையில் இருந்த பணத்தை மக்கள் வங்கியில் செலுத்துவதற்காக அலைமோதினர். நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களும் வியாபாரிகளும் திண்டாடி போகினர்.
அப்போது டிஜிட்டல் பரிவர்த்தனையும் அந்த அளவு மக்கள் மத்தியில் அதிகமாக இல்லை. இதனால், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு கூட பணத்தை கொடுக்க முடியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டு இருந்தனர். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள மக்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
பெட்ரோல் நிலையங்களிலும் வங்கிகளிலும் இந்நோட்டுகளை மாற்ற வசதி செய்யப்பட்டது. தங்களது வேலையை விட்டு வங்கிகளில் வரிசைகளில் மக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் அந்த பணத்தை எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் இருந்ததால் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
அதன்பிறகு படிப்படியாக நிலை சீரானது. சுருக்கமாக சொல்வது என்றால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரே இரவில் பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பண மதிப்பிழப்புக்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது. ஏனெனில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூபாய் தாளின் மதிப்பு செல்லாது என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர் வங்கி தெரிவித்துள்ளது. நாள் ஒன்றிற்கு 20 ஆயிரம் 2 ஆயிரம் நோட்டுக்களைமாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications