Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைகளிடம் இருந்து மொபைலை வாங்குங்க முதல்ல.. ஆட்டிசம் வரும் ஆபத்து அதிகமாம்! மருத்துவர்கள் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஸ்மார்ட்போன் பயன்பாடு இப்போது வெகுவாக அதிகரித்துவிட்ட நிலையில், இது குழந்தைகளிடையே விர்ச்சுவல் ஆட்டிசத்தை அதிகம் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நவீன வாழ்க்கையில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. வீட்டிற்கு தேவையான ஷாப்பிங் முதல் வாழ்க்கைக்குத் தேவையான துணையைக் கண்டறிய டேட்டிங் வரை எல்லாமே நாம் மொபைல் மூலம் செய்து வருகிறோம்.

Doctors Warns that Smartphones Might Give Children Virtual Autism

இதனால் நாம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான காலம் மொபைல் திரைகளையே பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது நமது வாழ்க்கை முறையையே பெரியளவில் மாற்றிவிட்டது.

மொபைல் பயன்பாடு: எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நபர்களுடன் இணையம் வழியாக நாம் பேசுவோம். ஆனால், நம் பக்கத்திலேயே இருக்கும் நபருடன் முகம் கொடுத்துப் பேச மாட்டோம். மொபைல்கள் வந்த பிறகு குடும்பத்திற்குப் பேசிக் கொள்வதே வெகுவாக குறைந்துள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கிடையே மொபைல் பயன்பாட்டால் ஏற்படும் மற்றொரு மோசமான ஆபத்து குறித்து ஆய்வாளர்கள் இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இப்போது எங்கே திரும்பினாலும் ஸ்மார்ட்போன்கள் தான் இருக்கிறது. ஒரே நபர் 2, 3 ஸ்மார்ட் போனை வைத்திருக்கிறார்கள். இதனால் இந்த தலைமுறை குழந்தைகளும் நாள் முழுவதும் மொபைலை பயன்படுத்தி வருகின்றனர். சின்ன குழந்தைகள் கூட மொபைல் போன் இருந்தால் தான் சாப்பிடுவேன் என இடம்பிடிக்கிறது. ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகவிட்டால் அது நம்மை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும்.

விர்ச்சுவல் ஆட்டிசம்: ஸ்மார்ட்போன்கள் என்னதான் பொழுதுபோக்குக்காகப் பயன்பட்டாலும் கூட அவை மன ரீதியாகப் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது குழந்தைகளிடையே ஆட்டிசம், குறிப்பாக விர்ச்சுவல் ஆட்டிசத்தை இது அதிகம் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ளனர். அதென்ன விர்ச்சுவல் ஆட்டிசம் வாங்கப் பார்க்கலாம்.

Doctors Warns that Smartphones Might Give Children Virtual Autism

விர்ச்சுவல் ஆட்டிசம் என்றால் என்ன: விர்ச்சுவல் ஆட்டிசம் என்பது பொதுவாக நான்கு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளில் காணப்படும் ஒரு நிலை.. ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் டிவியை அதிகம் பார்ப்பது குழந்தைகளைப் பாதிக்கிறது. இதனால் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் பழகுவது குழந்தைகளுக்குக் கடினமாகிறது. இந்த குழந்தைகள் மற்றவர்களுடன் பேசவே அச்சப்படுவார்கள்.

விர்ச்சுவல் ஆட்டிசத்தின் அறிகுறிகள்: குழந்தைகளுக்கு ஆட்டிசம் இல்லாமலேயே ஆட்டிசத்தின் அறிகுறிகளைப் பெறுவதை விர்ச்சுவல் ஆட்டிசம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், "குழந்தைகளிடம் பெரும்பாலானோர் மொபைலை கொடுத்து விடுகிறார்கள். இப்போதெல்லாம் கற்றலும் கூட மொபைல் மூலமே நடக்கிறது. இது குழந்தைகளின் பேச்சுத் திறனைக் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்து உள்ளது" என்றார்.

ஆக்ரோஷமான நடத்தை, அதீத கோபம், ஸ்மார்ட்போனுக்கு அடிமையாதல், தூங்குவதில் பிரச்சனை ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.

சிகிச்சை முறை: விர்ச்சுவல் ஆட்டிசம் இருக்கும் குழந்தைகளுக்கு உரியச் சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பாக இவர்களின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதால் அதற்காகச் சிகிச்சை அளிக்க வேண்டும். இது தவிரக் கல்வி சிகிச்சை, பர்சனாலிட்டி டெவலப்மென்ட் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விர்ச்சுவல் ஆட்டிசத்தின் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குப் பெற்றோரின் மரபியல் (genetics) ஒரு காரணம் என்றாலும் கூட மொபைல் போன்ற ஸ்கிரீன்களை நாம் அதிகம் பார்க்க நேரிடுவதும் இதற்கு முக்கிய காரணம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது வரை இதற்கு எந்தவொரு மருந்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+