My daughter joined a cult.. நித்யானந்தா குறித்த ஆவணத் தொடர் இன்று ஓடிடியில் வெளியீடு!
டெல்லி: நித்யானந்தாவின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை குறித்த "My daughter joined a cult" எனும் ஆவணத் தொடர் இன்று இந்தியா முழுவதும் ஓடிடியில் வெளியாகிறது.
நித்யானந்தா - எப்போதும் மக்களுக்கு திகட்டாத ஒரு "சப்ஜெக்ட்". இவர் குறித்த செய்திகள், குறிப்புகள், பேட்டிகள், வீடியோக்களை மக்கள் பார்ப்பது வழக்கம். இவர் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும் இவரது செயல்பாடுகளை மக்கள் ரசிப்பர்.
இவர் பேசுவது சிரிப்பது எல்லாமே இளைஞர்களுக்கு என்டர்டெய்ன்மென்ட்டாக இருக்கும். இவரது சேட்டைகள், சர்ச்சைகள், காமெடி பேச்சுகள், மாறுவேடங்கள் உள்ளிட்டவற்றை ஒரு படமாகவே எடுக்கலாம்.

ஆவண தொடர்
ஆனால் இவரது வாழ்க்கை வரலாறு ஆவண தொடராக எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு "My daughter joined a cult" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடர் இன்று இந்தியா முழுவதும் ஓடிடியில் டிஸ்கவரி பிளஸில் வெளியாகிறது. 3 பகுதிகளாக வெளியாகும் இந்த தொடரை வைஸ் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

இயக்குநர்
இந்த தொடரை நமன் சரையா என்பவர் இயக்கியுள்ளார். இது இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. நித்யானந்தா தியான பீடம் மற்றும் ஆசிரமத்தில் சீடர்களை கவர்ந்தது முதல் அவர்களை துன்புறுத்தியது வரை முன்னாள் பக்தர்களின் பேட்டிகளை வைத்து தொடராக்கப்பட்டது.

வீழ்ச்சிக்கு காரணம்
இதுகுறித்து இயக்குநர் நமன் கூறுகையில் இந்த தொடர் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். நித்யானந்தா வீழ்ச்சி அடைய காரணமாக இருந்த நிகழ்வுகள் உள்ளிட்டவையும் இதில் இடம் பெறும். முன்னாள் பக்தர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை கேட்டு நித்யானந்தா குறித்த ஆவணத் தொடர் உருவாகியுள்ளது.

சர்ச்சை
சர்ச்சைக்குரிய வகையில் இருந்தாலும் அவருக்கு பக்தர்கள் கூட்டம் எப்படி வந்தது போன்றவை எல்லாம் இதில் இடம்பெறும். நித்யானந்தா குறித்தும் அவரது அமைப்புகள் குறித்தும் நிறைய பேரிடம் பேசி விரிவாக கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிப்பால் லைவில் நித்யானந்தா வராமல் இருந்தார். தற்போது இந்த ஆவணப் படத்தின் மூலம் நித்யானந்தா குறித்து முழு விவரங்களும் மக்களுக்கு சென்றடைய போகிறது. நித்யானந்தாவின் நிஜ வாழ்க்கையில் உள்ள மர்மங்களுக்கு இந்த ஆவணத் தொடர் மூலம் பதில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications