வீடுகளை இடிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு.. ஆக்கிரமிப்புகளுக்கு பொருந்துமா.. உண்மை என்ன?
டெல்லி: வீடுகளை இடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீர்நிலை ஆக்கிரமிப்பு, சாலை, நடைபாதை கட்டுமானங்களுக்கு பொருந்துமா.. உண்மை என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சில மாநிலங்களில், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வீடுகள் மற்றும் கடைகள், புல்டோசர் மூலம் இடிக்கப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனம் 142-வது பிரிவு அளித்த சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டிருக்கிறது,
இதன்படி ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும் உரிய சட்டநடைமுறையை பின்பற்றாமல் அவரது வீட்டை இடிப்பது சட்டவிரோதம் என்று அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அரசு அதிகாரிகள், நீதிபதிகளாக மாறக்கூடாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வீடுகள் மற்றும் கடைகள், புல்டோசர் மூலம் இடிக்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கட்டிடங்கள் இடிப்பு தொடர்பாக நாடுதழுவிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்த. விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதற்காக ஒருவரது வீட்டை இடிப்பதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள். அதேநேரம் சாலை நடுவில் கோவிலோ, தர்காவோ எதுவாக இருந்தாலும், அதை அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்,
கருத்துக்கள் ஒரு புறம் எனில், விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று கட்டிட இடிப்பு தொடர்பாக நாடு தழுவிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தீர்ப்பளித்தனர். அப்போது நீதிபதிகள் கூறும் போது, சில மாநிலங்களில் அதிகாரிகள், அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தி, வீடுகளை இடித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டு வருகிறது. எனவே, அரசியல் சாசனம் 142-வது பிரிவு, உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, சில உத்தரவுகளை பிறப்பிப்பது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்.
இதன்படி, ஒருவருக்கு வசிப்பிடம் என்பது அடிப்படை உரிமை. அதை தன்னிச்சையாக மீறக்கூடாது. எந்த கட்டிடத்தையும் முன்கூட்டியே விளக்க நோட்டீஸ் கொடுக்காமல் இடிக்கக்கூடாது. உள்ளூர் நகராட்சி சட்டம் வகுத்துள்ள நேரத்துக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அல்லது, நோட்டீஸ் அளிக்கப்பட்ட நாளில் இருந்து குறைந்தபட்சம் 15 நாட்கள் கால அவகாசம் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவரது வீட்டை இடிக்கக்கூடாது. குற்றவாளியாகவே இருந்தாலும், உரிய சட்டநடைமுறையை பின்பற்றாமல் இடிப்பது முற்றிலும் சட்டவிரோதம் ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் கூட அரசியல் சாசனம் மற்றும் குற்றவியல் சட்டங்களின்படி, சட்ட பாதுகாப்பு வழங்கி உள்ளது.
எனவே அரசு அதிகாரிகள், நீதிபதிகளாக மாறக்கூடாது. ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவரை குற்றவாளியாக அறிவித்து, நீதிபதி போல் அவருக்கான தண்டனையாக வீட்டை இடிக்க உத்தரவிடுவது அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது ஆகும். ஒருவர் குற்றவாளியா என்பதை நீதித்துறைதான் முடிவு செய்ய வேண்டும்.
அரசு அதிகாரிகள், தன்னிச்சையாக ஒருவரது வீட்டை இடிப்பது சட்டத்தின் ஆட்சி கொள்கைக்கு முற்றிலும் முரணானது. வீடுகளை இடிப்பது தண்டனை அல்ல. ஒருவரது வீட்டை இடிப்பது அவசியம் என்று அதிகாரிகள் கருதினால், அவருக்கு முன்கூட்டியே விளக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அந்த நோட்டீசை பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். வீட்டின் வெளிப்புற சுவரிலும் நோட்டீசை ஒட்டுதல் வேண்டும். மேலும் வீட்டை இடிப்பது தொடர்பாக நோட்டீஸ் வெளியிடுவதற்காக தனி இணையதளம் ஒன்றை 3 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும். வீட்டை பகுதியாகவோ, முழுமையாகவோ இடிப்பதற்கான காரணங்களை அதில் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
வீடு இடிப்பு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு கூட சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்காக சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும். ஒருவர் தனது வீட்டை இடிக்கும் உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவிக்காவிட்டால் கூட அவர் வீட்டை காலி செய்து மாற்று ஏற்பாடு செய்வதற்காக போதிய கால அவகாசத்தை அதிகாரிகள் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர், அவரே ஆக்கிரமிப்பை அகற்றவும் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.
ஏனெனில், ஒரே இரவில் பெண்களும், குழந்தைகளும், நோயாளிகளும் சாலையில் நிறுத்தப்படுவதை காண்பதை சகித்துக் கொள்ள இயலாது. சிறிது காலம் அதிகாரிகள் கையை கட்டிக்கொண்டிருப்பதால், வானம் ஒன்றும் அதிகாரிகளின் தலையில் இடிந்து விழாது. சட்டவிரோத கட்டிடமாக இருந்தாலும், மற்ற சட்டவிரோத கட்டிடங்களை விட்டுவிட்டு, குறிப்பிட்ட கட்டிடத்தை மட்டும் இடிப்பது சட்டவிரோதம் ஆகும்.
சட்டவிரோதமான குடியிருப்புகள் அல்லது வீடுகளை இடிக்கும்போது, அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தையும் ஒரு மாதத்துக்குள் அதிகாரிகள் பின்பற்றத் தொடங்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை மீறும் அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது. அவர்களுக்கான இழப்பீடு, சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படும்.
எனினும் இந்த உத்தரவு, சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், ரெயில்வே தண்டவாள ஓரம், நீர்நிலைகள் போன்ற பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அங்கீகாரமற்ற கட்டுமானங்களுக்கு இந்த உத்தரவுகள் பொருந்தாது. மேலும், வீடுகளை இடிக்க நீதிமன்றங்கள்உத்தரவிட்ட சம்பவங்களுக்கும் பொருந்தாது" இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications