ஜூன் முதல் உள்நாட்டு விமான சேவை.. புக்கிங்கை திறந்த தனியார் விமான நிறுவனங்கள்
டெல்லி: தனியார் விமான நிறுவனங்கள் ஜூன் முதல் உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்க உள்ளதாக முன்பதிவை திறந்துள்ளன.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு தழுவிய லாக்டவுன் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகள் மே 31 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மாலை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி, "உள்நாட்டு விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுப்பது விமான போக்குவரத்து துறை அமைச்சகமோ அல்லது மத்திய அரசு மட்டும் அல்ல. கூட்டுறவு கூட்டாட்சிவாதத்தின் உணர்வில், இந்த விமானங்கள் புறப்படும் மற்றும் சேரும் மாநில அரசுகளின் கையில் உள்ளது. மாநில அரசுகள் தான் சிவில் விமான நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும்" என்றார்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் விமான நிறுவனங்களின் வணிக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஜுன் முதல் மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க விமான நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஏர் மற்றும் ஏர் ஏசியா ஆகியவை உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவுகளை ஆரம்பிக்க தொடங்கி உள்ளன. ஜுன் மாதத்தில் முதல் இரண்டு-மூன்று நாட்களுக்கு விமானக் கட்டணங்கள் கிட்டத்தட்ட ரூ .1000 அதிகமாக இருக்கிறது. எனினும் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்யத் தயாராக இருப்பது வலைதள பக்கங்களை பார்த்தால் தெரிகிறது..
தொடர்ந்து லாக்டவுன் அமலில் இருப்பதால் டெல்லி-மும்பை மற்றும் பிற முக்கிய வழித்தடங்களில் ஜூன் மாத தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் விமானங்களின் தேவை இருக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. சென்னை, மும்பை, அஹமதாபாத், டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் விமான சேவைகளை இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. மாநில அரசுகளும் விமான சேவையை அனுமதிக்க தயக்கம் காட்டுகின்றன. எனினும் மே 31க்கு பிறகு விமான சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications