நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது
டெல்லி: கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் இன்று காலை முதல் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நாட்டின் விமான போக்குவரத்து சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதேபோல் இதர பொது போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன.

அண்மையில் வெளிநாடுகளில் லாக்டவுன்களால் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின.
2 மாதங்களுக்குப் பின்னர் விமான சேவைகள் தொடங்குவதால் கடந்த சில நாட்களாக அனைத்து விமான நிலையங்களும் முழு வீச்சில் தூய்மைப்படுத்தப்பட்டன. அனைத்து விமான நிலையங்களிலும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் இருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து அதிகாலையில் அந்தமானுக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.
சென்னையில் இருந்து மதுரைக்கு காலையில் புறப்படும் விமானம் சுமார் 8.20 மணிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சென்னையில் இருந்து கோவைக்கும் விமானம் இயக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் இருந்து 25 விமானங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Delhi: Passengers at Indira Gandhi International (IGI) Airport, Terminal-3 as domestic flight operations resume from today (25th May 2020). pic.twitter.com/dR9v8Rv0Ws
— ANI (@ANI) May 24, 2020
ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் இருந்து விமான சேவைகள் இயக்கப்படவில்லை. இதனிடையே விமான சேவைகள் தொடர்பாக மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 15 விமானங்கள் ரத்து
இதனிடையே சென்னையில் இருந்து புறப்படும் 15 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. போதுமான பயணிகள் இல்லாத காரணத்தால் இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications