டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தயாராக இருங்கள்.. ராகுலுக்கு வந்த முக்கிய அறிவுரை.. இன்று இரவே முக்கிய தலைகளை சந்திக்க திட்டம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை டெல்லியில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahul Gandhi: இன்று இரவே முக்கிய தலைகளை சந்திக்க ராகுல் காந்தி திட்டம்!- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை டெல்லியில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்.

    லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிவிற்கு வந்து இருக்கிறது.

    இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. நேற்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    எலக்சன் ரிசல்ட் நெருங்க நெருங்க.. 'கையை' உதறித் தள்ளுகிறதா அண்ணா அறிவாலயம்? எலக்சன் ரிசல்ட் நெருங்க நெருங்க.. 'கையை' உதறித் தள்ளுகிறதா அண்ணா அறிவாலயம்?

    என்ன சொன்னது

    என்ன சொன்னது

    நேற்று வந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, பாஜக கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 36 இடங்களை வெல்லும். மற்ற மாநில கட்சிகள் 111 இடங்களை வெற்றிபெறும் இடங்களை வெல்லும் என்கிறார்கள்.

    கடும் அதிர்ச்சி

    கடும் அதிர்ச்சி

    இதுதான் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதன்படி காங்கிரஸ் இந்த தேர்தலுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்தது. ஆனால் இவ்வளவு பிரச்சாரம் செய்தும், நல்ல கூட்டணி அமைத்தும் கூட, காங்கிரஸ் கட்சியால், வெற்றியை ருசிக்க முடியவில்லையே என்று வருத்தத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

    ஆனால் என்ன சொன்னார்கள்

    ஆனால் என்ன சொன்னார்கள்

    அதே சமயம் சில அரசியல் வல்லுநர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் சொல்லியும் இருக்கிறார்கள். இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தவறாக முடியவே அதிக வாய்ப்பு இருக்கிறது. 2 நாள்கள்தான் இருக்கிறது. மனம் தளர வேண்டாம். நீங்கள் உங்கள் அரசியல் பணிகளை கவனியுங்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.

    சதி இருக்க வாய்ப்புள்ளது

    சதி இருக்க வாய்ப்புள்ளது

    மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சதி இது. தேர்தலுக்கு பிந்தைய முடிவுகள் சாதகமாக வந்தால், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.அதை தடுக்கவே, இப்படி கருத்து கணிப்புகள் வந்துள்ளது. அதனால் இதை கண்டுகொள்ள வேண்டாம். நீங்கள் பேச்சுவார்த்தையை தொடங்குங்கள் என்றும் அறிவுரைகள் சென்றுள்ளது.

    ராகுல் சந்திப்பு

    ராகுல் சந்திப்பு

    இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முக்கியமான தலைவர்களை சந்திக்க இருக்கிறார் என்கிறார்கள். இன்று இரவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சந்திரபாபு நாயுடு இன்று காலை டெல்லி செல்வதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இரவு முக்கியம்

    இரவு முக்கியம்

    ஆனால் கடைசி நேரத்தில் அவரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்று இரவு அந்த சந்திப்பும் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சந்திரபாபு நாயுடுவுடன் சேர்த்து காங்கிரஸ் தலைவர் இன்னும் சில தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

    English summary
    Don't give light on Exit Poll, Congress Chief Rahul Gandhi decides to stick to the plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X