ட்விட்டரில் களைகட்டும் #IndiaWelcomesTrump #NamasteyTrump #GoBackTrump

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்திய வருகையை முன்னிட்டு ட்விட்டரில் அவரை வரவேற்றும் எதிர்த்தும் ஹேஷ்டேக்குகள் களைகட்டியுள்ளன.

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்பகல் 11.40 மணிக்கு குஜராத்தின் அகமதாபாத் வருகை தர உள்ளார். அவரை வரவேற்க பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.

    Donald Trumps India Visit top in Twitter trend

    டிரம்ப்பின் இந்திய பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பாஜக எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமிகூட, டிரம்ப்பின் வருகையால் இந்தியாவுக்கு ஒரு பயனும் இல்லை என கூறியிருந்தார்.

    இந்நிலையில் #IndiaWelcomesTrump #NamasteyTrump #GoBackTrump என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் களைகட்டியுள்ளன. இன்றைய ட்விட்டர் டிரெண்டிங்கை டிரம்ப் ஆக்கிரமித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    #NamasteyTrump என்ற ஹேஷ்டேக்கில், @ChouhanShivraj மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் டிரம்ப்பை வரவேற்று பதிவிட்டிருக்கிறார்.
    ·
    #IndiaWelcomesTrump @praveen12173565 என்ற பதிவர், உலகின் பழமையான ஜனநாயக நாடு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடை சந்திக்கிறது என கூறியுள்ளார். @RealAjayIngole என்ற பதிவர், 1.3 மில்லியன் நண்பர்கள், உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

    #GoBackTrump ஹேஷ்டேக்கில், @Advaidism என்ற பதிவர், இதற்கு முன்னரும் அமெரிக்கா அதிபர்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். ஆனால் இதுபோன்ற சர்க்கஸ் நடத்தியது இல்லை. எதற்காக டிரம்ப்பை ஒரு கடவுள் போல கொண்டாடுகின்றனர்? என கேள்வி கேட்டுள்ளார்.

    மேலும் @HedayatKarim என்பவர், டிரம்ப்பின் இந்தியா வருகையால் என்ன பயன்? ஏன் நமது பணத்தை வீணாக்க வேண்டும்? என கொதித்து போயுள்ளார். @ihansraj என்ற ட்வீட்டிஸ்ட், குஜராத் சுவர் கட்டுமான பணி படத்தை பதிவிட்டு, முட்டாளாக்காதீர்கள், இதுதான் இந்தியா; மோடி காட்டுவது உண்மையான இந்தியா அல்ல என கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+