Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்கே சொன்ன வார்த்தை.. தலைமையை விளாசிய சசிதரூர்.. விரைவில் விலகல்? போஸ்ட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி தான் முதலில் என்று சிலர் புகழ்ந்து வருகின்றனர் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூரை இன்று மறைமுகமாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த சில நிமிடங்களில் சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது. இதன்மூலம் நேரடியாக கார்கேவை அவர் எதிர்த்துள்ளதோடு, விரைவில் அவர் காங்கிரஸை விட்டு விலகுகிறரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சசிதரூர். இவர் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக இருக்கிறார். இவருக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் இடையே நல்ல உறவு என்பது இல்லை.

அதுமட்டுமின்றி சமீப காலமாக சசிதரூர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த விஷயத்தை சசிதரூர் புகழ்ந்து பேசினார். அதன்பிறகு கேரளாவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் சசிதரூர் கலந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி ‛ஆபரேஷன் சிந்தூர்' குறித்து வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க சென்ற 7 குழுவில் ஒன்றை சசிதரூர் எம்பி வழிநடத்த பிரதமர் மோடி வாய்ப்பு வழங்கியிருந்தார். காங்கிரஸ் கட்சி வேறு எம்பியை பரிந்துரைத்த நிலையில் அதனை மத்திய அரசு நிராகரித்து சசிதரூரை தேர்வு செய்தது. அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளுக்கு சசிதரூர் தலைமையிலான குழு சென்று ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி எடுத்துரைத்தது.

பாகிஸ்தானை தாக்குவது பற்றி முன்கூட்டியே நம் நாடு அந்த நாட்டுக்கு தகவல் அளித்துவிட்டது என்று ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் மத்திய அரசின் எம்பிக்கள் குழுவுடன் சசிதரூர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். இது காங்கிரஸ் மேலிடத்தை கடும் டென்ஷனாக்கியது. இந்நிலையில் தான் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‛‛சசிதரூரின் மொழி நன்றாக உள்ளது. அதனால் தான் அவர் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் உள்ளார். நான் குல்பர்காவில் ஏற்கனவே கூறியிருந்தேன். அனைவரும் ஒரே மாதிரியாக பேச வேண்டும்.

நாங்கள் நாட்டுக்காக ஒன்றுபட்டு உள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஒன்றாக இருந்தோம். நாடு தான் முதலில் என்று கூறினோம். ஆனால் சிலர் மோடி தான் முதலில் என்றும் அதன் பிறகு தான் நாடு என்றும் கூறுகின்றனர். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்று கூறியிருந்தார். இதன்மூலம் மோடியை புகழ்ந்து பேசிய சசிதரூரை அவர் விமர்சனம் செய்திருந்தார்.

மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த பேட்டியை தொடர்ந்து சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் சிட்டுக்குருவியின் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், ‛‛பறக்க யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. சிறகுகள் உங்களுடையது. வானம் யாருக்கும் சொந்தமானது இல்லை'' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதன்மூலம் சசிதரூர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். ஒருவரை புகழ்ந்து பேச யாருடைய அனுமதியையும் கேட்க தேவையில்லை என்பதை மல்லிகார்ஜுன கார்கேவிற்கு கடத்தி உள்ளார். இதன்மூலம் கார்கே மீதான அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் மேலிடத்துக்கும், சசிதரூருக்கும் இடையே நல்ல உறவு இல்லை. இப்படியான சூழலில் இந்த பதிவு காங்கிரஸ் மேலிடத்தை குறிப்பாக கார்கேவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இதற்கிடையே தான் இன்னும் சிலர்காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் விமர்சனத்துக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற சசிதரூர் தயாராகிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் சசிதரூர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+