மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்! எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், "நாட்டில் 50% உள்ளவர்கள் தங்கள் உரிமையை பெறும் நேரம் வந்துவிட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய பெருமை ஒரு கட்சிக்கானது மட்டுமல்ல.

Women s Reservation Bill

மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்தியாவின் நாடாளுமன்றத்தின் வரலாற்றில் முக்கிய தருணமாக அடையாளப்படுத்தப்படும். இந்தச் சட்டம் உண்மையில் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதன்பிறகு காலப்போக்கில் அது மேலும் வலுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலமாக நாட்டுக்கான தேசிய கொள்கை உருவாக்கத்தில் பெண்கள் அதிகமாக ஈடுபட முடியும். இது நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெருமையாக கருதுகிறேன். உள்ளாட்சிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும்போது, நாடாளுமன்றத்தில் ஏன் தரக்கூடாது?

நான் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவன். அனைவரையும் சமமாகவே மதித்து செல்வேன். இங்குள்ள சிலர் மகளிர் இடஒதுக்கீடு குறித்து தனிப்பட்ட முறையில் ஆதரவாக பேசுகிறார்கள். ஆனால், இங்கு எதிர்க்கிறார்கள்.

தொகுதி மறுவரையறை குறித்த சந்தேகங்களுக்கு அமித்ஷா விளக்கமளித்துவிட்டார். எந்த ஒரு மாநிலத்திற்கும் அநீதியோ, பாகுபாடோ இருக்காது. நாட்டின் ஒரு பகுதி நலன் மட்டும் முக்கியமானது அல்ல. விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் மாற்றம் கிடையாது" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+