இஸ்லாமியர், சர்வாதிகார ஆட்சி என உச்சரிக்க ”தூர்தர்ஷன்” தடை- சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம்
டெல்லி: இஸ்லாமியர்கள், சர்வாதிகார ஆட்சி எனக் குறிப்பிடுவதற்கு மத்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷன் டிவி சேனல் தடை விதித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தூர்தர்ஷன் மற்றும் வானொலியில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்படுவது வழக்கம். இது தொடர்பான அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது. 6 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அரசியல் கட்சிகளின் தலைவர்களின் உரைகளில் சில வார்த்தைகளை பயன்படுத்த தூர்தர்ஷன் நிர்வாகம் தடை விதித்திருக்கிறது என்பது சர்ச்சையாகி இருக்கிறது.
டெல்லி தூர்தர்ஷன் டிவி சேனல் ஸ்டுடியோவில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் வீடியோ உரை பதிவு செய்யப்பட்டது. அப்போது திவால் என்ற வார்த்தையை சீதாராம் யெச்சூரி பயன்படுத்தினார். இதற்கு பதிலாக தோல்வி என்ற வார்த்தையை உச்சரிக்குமாறு சீதாராம் யெச்சூரி நிர்பந்திக்கப்பட்டார்.
இதேபோல பார்வார்டு பிளாக் தலைவர் தேவராஜன், அகில இந்திய வானொலிக்கு கொடுத்த ஆடியோவில் இடம் பெற்றிருந்த முஸ்லிம்கள்/ இஸ்லாமியர் என்ற வார்த்தையை நீக்கவும் நெருக்கடி தரப்பட்டிருக்கிறது. மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சிக்கும் இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள் என்ற வார்த்தையை தேவராஜன் பயன்படுத்தி இருந்தார். இதற்குதான் தடை விதித்ததாம் தூர்தர்ஷன். இஸ்லாமியர் என குறிப்பிடாமல் குடியிரிமைக்கு தகுதியான சிறுபான்மையினர் என சொல்ல வேண்டும் எனவும் தூர்தர்ஷன் நெருக்கடி கொடுத்துள்ளது. ஆனால் தேவராஜன் இதனை ஏற்க மறுத்திருக்கிறார். அவரது உரை ஒலிபரப்பான போது இஸ்லாமியர்கள்- முஸ்லிம்கள் என வார்த்தை நீக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தூர்தர்ஷன் நிர்வாகத்துக்கு சீதாராம் யெச்சூரி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களது கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். திவால் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தோல்வி என உச்சரிக்க சொல்கிறது தூர்தர்ஷன் நிர்வாகம். சர்வாதிகார ஆட்சி; கொடூர சட்டங்கள் என குறிப்பிடக் கூடாது என்கிறது. இது சர்வாதிகாரத்தையே வெளிப்படுத்துகிறது என காட்டமாக தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications