முழு லாக்டவுன்.. உடனே தேவை.. இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனில், இந்தியாவில் உடனடியாக சில வாரங்களுக்கு லாக் டவுன் அமல்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபௌசி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை, மற்ற உலக நாடுகளில் ஏற்பட்ட 2வது அலையை விட மிகத் தீவிர பாய்ச்சலாக உள்ளது. மத்திய அரசும் சரி, மாநில அரசாங்கங்களும் சரி யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல் புரட்டி எடுத்து வருகிறது.

இந்த சூழலில், அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபௌசி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தளத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவில் நிலவும் கொரோனா சூழல் குறித்து அவர் விரிவாக பேசியுள்ளார்.

 உங்களால் என்ன முடியும்?

உங்களால் என்ன முடியும்?

குறிப்பாக, "இப்போது, இந்தியா மிகவும் கடினமான மற்றும் அவநம்பிக்கையான சூழ்நிலையில் உள்ளது. எனவே இதுபோன்ற ஒரு சூழ்நிலை உங்களுக்கு இருக்கும்போது, நீங்கள் உடனடி தீர்வை ஆராய வேண்டும். முதலில் நீங்கள் செய்யக்கூடிய உடனடி விஷயம் என்ன என்பதை பார்க்க வேண்டும். இரண்டு வாரங்களில் உங்களால் செய்யக்கூடிய விஷயம் என்ன? இந்த பரவலைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் ஒன்று - நீங்கள் அதை பல்வேறு கட்டங்களாக பார்க்க வேண்டும்.

 ஒரு வாரத்துக்கு முன்பே

ஒரு வாரத்துக்கு முன்பே

எடுத்துக்காட்டாக, இப்போதே மக்களுக்கு தடுப்பூசி போடுவது, நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்றாகும். இது உடனடியாக ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்களுக்கும், மருத்துவமனையில் இடம் தேவைப்படுபவர்களுக்கும், மருத்துவ பராமரிப்பு தேவைப்படுபவர்களின் உடனடிப் பிரச்சகளையும் தீர்க்கப் போவதில்லை. ஆனால், இன்று மக்களுக்கு தடுப்பூசி போடுவது, என்பது மற்றவர்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்க சில வாரங்களுக்கு முன்னதாகவே நீங்கள் எடுக்கும் நடவடிக்கையாக இருக்கும். இதுதான் இப்போது அவசியம்.

 முதல் தேவை

முதல் தேவை

சீனர்கள் இதுபோன்று நெருக்கடி ஏற்பட்டபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சில நாட்களில் இருந்து வாரங்களுக்குள் அவர்கள் எமெர்ஜென்சி பிரிவுகளை கட்டியெழுப்பினார்கள். இது மக்களைக் கவனித்துக்கொள்வதற்காக மருத்துவமனைகளாக செயல்பட்டது. எல்லோரும் ஆச்சர்யப்பட்ட ஒரு சாதனை அது. இந்தியாவில் மக்கள் மருத்துவமனை மற்றும் நல்ல கவனிப்புகளை தேடுகிறார்கள். இப்போது அதை கொடுப்பது தான் முதல் தேவை.

 போரில் எதிரி வைரஸ்

போரில் எதிரி வைரஸ்

இரண்டாவது விஷயம், நீங்கள் அரசாங்கத்தின் வெவ்வேறு குழுக்களின் உதவிகளை பெறலாம். உதாரணமாக, இராணுவத்தின் பங்கு என்ன? இராணுவம் உள்ளே வந்து உதவ முடியுமா? அதாவது, அமெரிக்காவில், தடுப்பூசிகளை விநியோகிக்க எங்கள் தேசிய காவலரைப் பயன்படுத்தியதைப் போல நீங்கள் உடனடியாக இராணுவ உதவியைப் பெறலாம். இது குறைந்தபட்சம் தீவிரமாக கருதப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு போர் வந்துவிட்டதாக நினைத்து இடைநிலை மருத்துவமனைகள் விரைவாக கட்டப்பட வேண்டும். இந்த போரில் எதிரி வைரஸ். எதிரி எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும், எனவே இது அவசரகாலமாக இருப்பதால் நான் அதை கிட்டத்தட்ட போர்க்களம் என்றே கூறுவேன்.

 1.4 பில்லியன் மக்கள்?

1.4 பில்லியன் மக்கள்?

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இரண்டு சதவீத மக்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டிருப்பது மிகவும் மோசமான நிலைமை என்பேன். நீங்கள் நிச்சயமாக அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். முழுமையான உடனடி சிக்கலை நிவர்த்தி செய்யுங்கள், தடுப்பூசிகளைப் பொறுத்தவரை தொலைதூர பார்வை வேண்டும். உலகில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் நீங்கள் ஒப்பந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இப்போது தடுப்பூசிகளைக் கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் உள்ளன. ஒரு உறுதிப்பாட்டைப் பெற நீங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா என்றால் என்ன, 1.4 பில்லியன் மக்கள்? நீங்கள் பெற வேண்டிய நிறைய தடுப்பூசிகள் உங்களிடம் உள்ளன, நான் பல வேறுபட்ட நிறுவனங்களுக்குச் சென்று ஒப்பந்த ஏற்பாடுகளைப் பெற முயற்சிப்பேன், இதன் மூலம் உங்களால் முடிந்தவரை விரைவாக தடுப்பூசிகளைப் பெற முடியும். மேலும், உலகிலேயே அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. தடுப்பூசிகளை தயாரிக்க உங்கள் சொந்த திறன்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.

 யாரும் விரும்பல

யாரும் விரும்பல

ஆக்சிஜன் பெறுவது, மருத்துவ உதவி பெறுவது, பிபிஇ பெறுவது உங்களுக்கு முக்கியம் என்றால், தேசம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவது அதைவிட உங்களுக்கு இப்போது முக்கியமானது என்பேன். ஒரு வருடத்திற்கு முன்பு சீனாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, அவர் முழு லாக் டவுன் விதித்திருந்தார்கள் என்பது நமக்கு தெரியும். நீங்கள் லாக் டவுன் அமல்படுத்தினால், ஆறு மாதங்களுக்கு அப்படியே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஒரு தற்காலிக லாக் டவுன் ஏற்படுத்தலாம். நாட்டில் லாக் டவுன் போட யாரும் விரும்புவதில்லை. ஆறு மாதங்களுக்கு நீங்கள் அதைச் செய்யும்போது அது ஒரு பிரச்சனையாகும். ஆனால் நீங்கள் ஒரு சில வாரங்களுக்கு இதைச் செய்தால், பரவலை கட்டுப்படுத்துவதில் நீங்கள் தாக்கம் ஏற்படுத்த முடியும்.

 மாற்றிக் காட்டுவோம்

மாற்றிக் காட்டுவோம்

இந்திய மக்களுக்கு, நான் ஒன்றை சொல்வேன். எல்லோரும் இதில் ஒன்றாக இருக்கிறார்கள். நாம் ஒரு சாதாரண நிலைக்கு வருவோம். இப்போது துன்பம் உள்ளது, ஆனால் நாங்கள் அதை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று உத்தரவாதம் தருகிறேன். அங்கேயே இருங்கள், ஒருவருக்கொருவர் உதவுங்கள். ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ளுங்கள், விஷயங்கள் இயல்பு நிலைக்கு வரும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+