10 மாதங்களுக்கு பின் 'சர்ச்சைக்குரிய' தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய தலைவராக பிஎன் கங்காதர் நியமனம்
டெல்லி: தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய தலைவராக டாக்டர் பி என் கங்காதர் 10 மாதங்களுக்குப் பின் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியத்தின் தலைவரும் தேசிய மருத்துவ ஆணையத்தின் பொறுப்பு தலைவராகவும் பதவி வகித்த டாக்டர் பி என் கங்காதர் தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் முதல் தலைவராக டாக்டர் சுரேஷ் சந்திர ஷர்மா பதவி வகித்து வந்தார். இவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவடைந்தது. இதனையடுத்து டாக்டர் பிஎன் கங்காதர், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார். தேசிய மருத்துவ ஆணையத்துக்கு முழு நேர அதாவது புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது சர்ச்சையானது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும், தன்னாட்சி வாரியங்களுக்கும் பல்வேறு நபர்களை அமைச்சரவையின் நியமனக்குழு நியமித்துள்ளது. இந்த நியமனங்கள் 4 ஆண்டு காலத்திற்கு, நியமிக்கப்பட்டவர் 70 வயதை அடையும் வரை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை- இவற்றில் எது முந்தையதோ அதுவரை செல்லத்தக்கதாகும்.
புதிய நியமனங்கள் விவரம்:
- மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியத்தின் தலைவரான டாக்டர் பி என் கங்காதர் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரைத்திருநாள் மருத்துவ விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கழக இயக்குநர் டாக்டர் சஞ்சய் பிகாரி, மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மும்பையில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் இயக்குநர் (புற்றுநோயியல்) டாக்டர் அனில் டி குரூஸ், முதுநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ராஜேந்திர அச்யுத் பாட்வே, இளைநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் 2 ஆண்டு காலத்திற்கு, 70 வயதை அடையும் வரை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை- இவற்றில் எது முந்தையதோ அதுவரை செல்லத்தக்கதாகும்.
தேசிய மருத்துவ ஆணையம்: நாட்டின் மருத்துவ கல்லூரி சேர்க்கை, மருத்துவ கல்லூரி இடங்கள் ஆகியவை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடியதுதான் தேசிய மருத்துவ ஆணையம்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் சர்ச்சைகள்: தேசிய மருத்துவ ஆணையம் பிறப்பித்த புதிய வழிகாட்டுதல்கள், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளே திறக்க முடியாது என்கிற நிலைமை உருவாகி எதிர்ப்பை எதிர்கொண்டது. டாக்டர் பிஎன் கங்காதர் தற்காலிக தலைவராக பதவி வகித்த காலத்தில் உயிரியல் பாடமே படிக்காதவர்கள் மருத்துவ படிப்பில் சேரலாம் என்பதாக தகவல்கள் வெளியாகி பின்னர் விளக்கம் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுளான 'தன்வந்திரியின்' படம் வைக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications