ஜம்மு பாணியில்... ஆளில்லா விமானங்கள் ஊடுருவல் அபாயம்: தமிழகம், கேரளாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி/சென்னை: ஜம்மு பாணியில் ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) ஊருவும் அபாயம் உள்ளதாக தமிழகம், கேரளாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு விமானப் படை தளம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 ஆளில்லா விமானங்களான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 2 விமானப் படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஆளில்லா விமானங்கள்
விமான படை தளம் கட்டிடம் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆளில்லா விமானங்கள் ஜம்மு வான்பரப்பில் பறக்கவிடப்பட்டன. இதனால் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், கேரளாவுக்கு வார்னிங்
இந்த நிலையில் ஆளில்லா விமானங்கள் ஊருவும் அபாயம் இருப்பதாக தமிழகம், கேரளாவுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தமிழகம், கேரளா வழியாக இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன.

இலங்கையில் சீனா
ஏற்கனவே தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற்பரப்பு அருகே இலங்கை பகுதியில் சீனா ஊடுருவி நிற்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகமும் சீனா வசமாகி உள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேரளா திரும்பிய தீவிரவாதிகள்
மேலும் சிரியா, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கேரளாவுக்கு திரும்பி உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த பின்னணியில்தான் தமிழகம், கேரளா வழியாக இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications