டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..முழு எமெர்ஜென்சி பிறப்பித்த அதிகாரிகள்..என்னாச்சு?
டெல்லி: டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட சரக்கு விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது பறவை மோதியது. பறவை மோதியதில் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடிய விமான நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.45 மணியளவில் துபாய்க்கு FedEx- என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

அவசர தரையிறங்க அனுமதி
விமானம் ஆயிரம் அடி உயரத்தில் நடு வானில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விமானத்தின் கண்னாடியில் பறவை மோதியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை டெல்லி விமான நிலையத்திற்கே திருப்பி தரையிறக்க விமானி முடிவு செய்தார். இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானம் அவசர தரையிறங்க அனுமதி கேட்டார்.

விமானத்தை ஆய்வு செய்தனர்
தொடர்ந்து விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் தொழில் நுட்ப குழுவினர் விரைந்து சென்று விமானத்தை ஆய்வு செய்தனர். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடிந்த பிறகு விமானம் மீண்டும் நண்பகல் 1.40 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

பறவைகள் மோதுவதால்
விமானத்தில் பறவைகள் மோதுவது என்பது மிகவும் சாதாரண ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பறவைகள் மோதுவதால் உரிய பாதுகாப்பு பரிசோதனை செய்யாவிட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் இருப்பதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆகாஷா ஏர் விமானம் பறவை மோதியதால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக
அதேபோல், அண்மையில் சூரத்தில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பறவை மோதியதால் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. பறவை மோதியதில் விமானத்தின் என்ஜின் பிளேடும் சேதம் அடைந்து இருந்தது. கடந்த சில தினங்களாக டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் பலவும் அடிக்கடி திருப்பி விடப்பட்டு இருந்தது. கடந்த வியாழக்கிழகை மோசமான வானிலையால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் திருப்பி விடப்பட்டு இருந்தன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications