மேகதாது பிரச்சனை.. மத்திய அமைச்சரை சந்தித்தும் ஒரு வார்த்தை பேசாத துரை முருகன்! ஓ இதுதான்.மேட்டரா?
டெல்லி: காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக இன்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அப்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடாகா அரசு முயற்சி செய்து வருவது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு செய்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும். இவ்வாறு திறக்கப்படும் நீர் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் கண்காணிக்கப்படும்.

ஆனால் கர்நாடகா அரசு முறையாக தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவது இல்லை. இதனால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் உள்ள பயிர்கள் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் கர்நாடகா அரசு காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது.
இதுதொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் மிகவும் உறுதியாக இருக்கிறார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டிகே சிவக்குமாரின் செயல்பாடு மற்றும் கருத்துக்கு தமிழக அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லியில் இன்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.
இந்த வேளையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்காமல் உள்ளது. இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை முருகன் கோரிக்கை வைத்தார். மேலும் மேகதாது அணை தொடர்பாக துரை முருகன் எதையும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் பேசவில்லை என கூறப்படுகிறது.
இதனை துரை முருகனே உறுதி செய்துள்ளார். அதாது மத்திய அமைச்சரை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில் துரை முருகனிடம் இன்று பத்திரிகையாளர் கேள்வி ஒன்றை கேட்டார்.
அப்போது, ‛‛மேகதாது அணை குறித்து ஏதேனும் விவாதித்தீர்களா?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு துரை முருகன், ‛‛நோ.. நோ.. அது தேவையில்லாத ஒன்று. நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். ஒருபோதும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அதனால் தேவையின்றி இந்த விவகாரத்தை அங்கும், இங்கும் எடுத்து செல்ல விரும்பவில்லை'' என்றார்.
அதாவது மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவது என்பது தமிழக அரசின் அனுமதி வேண்டும். இத்தகைய சூழலில் தான் தமிழக அரசு மிகவும் உறுதியாக அணை கட்ட அனுமதிக்காது. இதனால் அதுபற்றி எதுவும் பேசவில்லை என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பேட்டியில் துரை முருகன் கூறுகையில், ‛‛காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதம் 3ம் தேதி நிலவரப்படி 12.213 டிஎம்சி நீர் வந்திருக்க வேண்டும். ஆனால் 2.993 டிஎம்சி தண்ணீர் மட்டும் கிடைத்துள்ளது. 9.220 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இது தொடர்ந்தால் டெல்டாவில் பயிர்கள் உலர்ந்துவிடும். இதனால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும்'' என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன் என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications