9.220 TMC பற்றாக்குறை! கர்நாடகா அரசுக்கு பிரஷர்! மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த துரை முருகன்
டெல்லி: கர்நாடகா அரசு காவிரியில் நீர் திறக்காத நிலையில் இன்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன் டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவாதிக்கப்பட்டது என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு செய்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடாமல் உள்ளது.

இதற்கிடையே தான் காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டவும் கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் இருமாநில தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். இந்த வேளையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்காமல் உள்ளது. இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை முருகன் கோரிக்கை வைத்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் துரைமுருகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதம் 3ம் தேதி நிலவரப்படி 12.213 டிஎம்சி நீர் வந்திருக்க வேண்டும். ஆனால் 2.993 டிஎம்சி தண்ணீர் மட்டும் கிடைத்துள்ளது. 9.220 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இது தொடர்ந்தால் டெல்டாவில் பயிர்கள் வாடிவிடும்.
இதனால் பற்றாக்குறையாக உள்ள தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கான நீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க தெரிவித்தேன்.
இதையடுத்து இணை செயலாளரை அழைத்து ஆலோசனை நடத்தி ஆணையத்துடன் பேசுவதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு அல்ல. மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால் மத்திய அமைச்சரை சந்தித்தோம். ஏற்கனவே இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் கடிதம் எழுதி உள்ளோம்'' என்றார்.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications