முதலில் விபத்து! அடுத்து இப்போது வாஷர் மிஸ்ஸிங்! இந்தியாவில் உள்ள போயிங் 737 விமானங்களின் நிலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் விமானம் மீண்டும் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், இந்திய விமானங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்த பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற அனைத்து போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் விமான போக்குவரத்து ரொம்பவே பாதுகாப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. சாலை விபத்துகளுடன் ஒப்பிடும் போது விமானங்களில் விபத்து ஏற்படுவதே அரிதிலும் அரிதுதான்.

 During Indian inspections Washer found missing on Boeing 737 MAX jet

கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் விமானங்களில் இருப்பதே இதற்கு காரணமாகும். அதையும் தாண்டி சில சமயங்களில் விபத்து நடக்கும். அப்போது ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்தது. ஆனால், அதன் பிறகு நடந்த சோதனையில் அந்த குறிப்பிட்ட விமான மாடலே சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

அலாஸ்கா ஏர்லைன்ஸ்: அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் தனது போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் 174 பயணிகள், ஆறு பணியாளர்களுடன் நடுவானில் பறக்கும் போது அதன் எமர்ஜென்சி கதவு ஒன்று அப்படியே பெயர்த்துக் கொண்டு போனது. நடுவானில் இந்த விபத்து நடந்த நிலையில், இருந்த இருக்கை ஒன்றும் பறந்து சென்றது.. இருப்பினும், அந்த இருக்கையில் யாரும் இல்லை என்பதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், அது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. விமானத்தின் பின்புறம் மிட் கேபின் கதவு இருந்த நிலையில், அந்த கதவுதான் அப்படியே பறந்துள்ளது. அந்த கேபின் கதவை எமர்ஜென்ஸி கதவாக இருக்கவே போயிங் நிறுவனம் வடிவமைத்து இருந்தது. இருப்பினும், இதை அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயன்படுத்தவில்லை. அது வழக்கமான இடத்தை போலக் கதவை பிளாக் பெய்த நிலையில். அதுதான் இப்போது அப்படியே பறந்துள்ளது.

போல்ட்கள் தளர்வு: இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. விமானங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள அனைத்து போயிங் 737 மேக்ஸ் நிறுவனத்தின் விமானங்களைச் சோதனை செய்ய அந்நாட்டு விமான கண்காணிப்பு அமைப்பு உத்தரவிட்டது. அதில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பல மேக்ஸ் விமானங்களில் போல்ட்கள் தளர்வாக உள்ளது கண்டறியப்பட்டது.

யுனைடெட் நிறுவனத்தில் மட்டும் சுமார் 10 விமானங்களில் இதுபோல போல்ட்கள் தளர்வாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோதனை தொடரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்தைக் கண்காணிக்கும் டிஜிசிஏ அமைப்பும் இந்த ரக விமானங்களைச் சோதனை செய்ய உத்தரவிட்டது.

மிஸ்ஸிங்: அதன்படி இந்திய விமானங்களால் இயக்கப்படும் அனைத்து 40 போயிங் 737 மேக்ஸ் விமானங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு விமானத்தில் வாஷர் கூட அப்படியே மிஸ்ஸாகியுள்ளது. இது விமானத்துறையில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்திய விமானங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஆகாசா ஏர் நிறுவனத்திடம் அதிகபட்சமாக 22 விமானங்கள் இந்த மாடலில் இருக்கிறது. தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் 9 விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் ஒன்பது விமானங்களும் உள்ளன. முதல் 39 விமானங்களில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத நிலையில், 40ஆவது விமானத்தில் தான் வாஷர் மிஸ்ஸாகியுள்ளது.

சர்ச்சை: இந்த 737 மேக்ஸ் விமானம் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த 2019- 2020 காலகட்டத்தில் இந்த குறிப்பிட்ட வகை விமானம் இரண்டு விபத்துகளில் சிக்கியது. அதில் 345 பேர் உயிரிழந்தனர். அதில் பாதுகாப்பு குளறுபடி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உலகெங்கும் உள்ள போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டது. தீவிர சோதனைக்குப் பிறகு அவை மீண்டும் பறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அது மீண்டும் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+