கும்பமேளாவில் நடந்த மாபெரும் மோசடி.. 1800% அதிகரித்த கொரோனா.. விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்
டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் கும்பமேளா சமயத்தில் போலி கொரோனா பரிசோதனைகள் விவகாரத்தில் மிகப் பெரியளவில் பண மோசடி நடந்துள்ளதாகவும் அது குறித்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறும் இந்துக்களின் புனித நிகழ்வு கும்பமேளா. இந்த முறை கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்வு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது.
ஆனாலும், கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி கும்பமேளாவை நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.

கும்பமேளா
கும்பமேளா வழக்கமாக நான்கு மாதங்கள் வரை நடைபெறும். ஆனால், இந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு மாதம் வரை மட்டுமே கும்பமேளா நடத்தப்பட்டது. முதியவர்களும் நோய் உள்ளவர்களும் கும்பமேளாவுக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஒரே சமயத்தில் லட்சக் கணக்கானோர் திரண்டனர். இதனால் வைரஸ் பாதிப்பு அங்கு அதிகரிக்கத் தொடங்கியது.

வைரஸ் பாதிப்பு
குறிப்பாக, முதல் சில நீராடலுக்குப் பின்னரே, உத்தரகன்டில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து பொதுமக்கள் யாரும் கும்பமேளாவில் பங்கேற்க வேண்டாம் எனப் பிரதமர் மோடி வெளிப்படியைாகவே வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னரே அங்கு வைரஸ் பரவல் வேகம் குறைந்தது. இருப்பினும் கும்பமேளா காரணமாக 1800% வரை வைரஸ் பாதிப்பு அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

கொரோனா சான்றிதழ்
கங்கை நதிக்கரையில் புனித நீராட விரும்பும் பக்தர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மாஸ்க், சமூக இடைவெளி போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இருப்பினும், களத்தில் நிலைமை வேறாகவே இருந்தது. பெரும்பாலான பக்தர்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமலேயே இருந்தனர்.

போலியான சோதனை
அதிலும் குறிப்பாகச் சிலர் கொரோனா RT PCR சோதனை முடிவுகளையும்கூட போலியாக சமர்ப்பித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கும்பமேளா முடிந்ததும் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்ததால் இது மிகப் பெரிய சர்ச்சையானது. உத்தரகண்ட் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை தனது விசாரணையைத் தொடங்கியது. கும்பமேளா சமயத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொண்ட லேப்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

ஆய்வகங்கள்
கும்பமேளா நடந்த சமயத்தில் தினசரி குறிப்பிட்ட அளவு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தளவு சோதனைகளை நடத்துவதற்குப் பதிலாக அந்த ஆய்வகங்கள் போலியாகப் பதிவுகளை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டன. அதாவது கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளாமலேயே பரிசோதனை செய்துவிட்டதைப் போலப் பதிவுகளைச் செய்துள்ளனர்.

அமலாக்கத் துறையினர்
இதனை அமலாகத்துறையினரும் தங்கள் விசாரணையில் உறுதி செய்தனர். ஒரே மொபைல் நம்பரைப் பயன்படுத்தி பலரது பெயர்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை அவர்கள் கண்டறிந்தனர். மேலும், கும்பமேளாவுக்கு வராத நபர்களிடம்கூட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது போலப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அமலாக்கத் துறையினர் கண்டறிந்தனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
இப்படி இந்த ஆய்வகங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் கொரோனா பாசிட்டிவ் விகிதம் குறைவாக இருந்ததைப் போலத் தோற்றம் உருவாது. அந்த சமயத்தில் ஹரித்துவார் பகுதியில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.18% ஆக இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5.3% வரையிலும் இருந்ததாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

பண மோசடி
இது தொடர்பாக ஐந்து முக்கிய ஆய்வகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், இது தொடர்பாக முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும், இதில் பண மோசடி நடந்ததாகற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.

பாசிட்டிவ் விகிதம்
இப்படி இந்த ஆய்வகங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் கொரோனா பாசிட்டிவ் விகிதம் குறைவாக இருந்ததைப் போலத் தோற்றம் உருவாது. அந்த சமயத்தில் ஹரித்துவார் பகுதியில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.18% ஆக இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5.3% வரையிலும் இருந்ததாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். வைரஸ் பாதிப்பு அங்கு அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கும்பமேளா நடந்து முடிந்த சில வாரங்களிலேயே அங்கு வைரஸ் பாதிப்பு 1800% மடங்கு வரை வைரஸ் பாதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications