டெல்லியில் திடீரென மாறிய கிளைமேட்.. அடித்து வீசிய புழுதிப்புயல்.. திண்டாடிப் போன மக்கள்!
டெல்லி: டெல்லியில் வாட்டி வதைத்த வெயிலுக்கு இடையே இன்று திடீரென புழுதிப்புயல் வீசியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக புழுதிப்புயல் வீசியதால் வாகன ஓட்டிகள் திண்டாடி போயினர். பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்த மக்களும் புழுதிப்புயலால் கடும் அவதி அடைந்தனர்.
நாடு முழுவதுமே வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் வெப்பம் தகித்தது. இதனால், பகல் நேரங்களில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் தான் இன்று டெல்லியில் திடீரென புழுதிப்புயல் வீசியது. பலத்த காற்று வீசியதால் குடிசைகள் பல சேதம் அடைந்தன.

பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்த மக்கள் இந்த புழுதிப்புயலால் கடும் அவதி அடைந்தனர். அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த புழுதிப்புயல் வீசியது. டெல்லி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இந்த புழுதிப்புயல் வீசியது. 60 கிலோ மீட்டர் மூதல் 70 கிலோ மீட்டர் வேகத்திற்கு புழுதிப்புயல் வீசியது.
பலத்த காற்று வீசுவதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. காசியாபூர், நொய்டா உள்ளிட்ட எல்லை பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. வீட்டில் இருக்க கூடிய மக்கள் ஜன்னல்களை மூடி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவியதால் டெல்லிக்கு வந்த இரண்டு ஏர் இந்தியா விமானங்களும் திருப்பி விடப்பட்டன.
புழுதிப்புயல் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. புழுதிப்புயலில் இருந்து தப்பிக்க டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முகத்தை மூடியபடி விமான நிலையத்திற்கு உள்ளே ஓடினர். முன்னதாக இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் புழுதிப்புயலுக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications