சுகர் டாடி.. நிதின் கட்கரியை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்! மீண்டும் சூடுபிடிக்கும் E20 விவகாரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: E20 எரிபொருள் பிரச்சனை மீண்டும் வெடிக்க தொடங்கியிருக்கிறது. தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் E20 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல அரசியல் விமர்சகர் தெஹ்சீன் பூனவல்லா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பூனவல்லா.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை 'சுகர் டாடி' என்று விமர்சித்திருக்கிறார். "எப்போதெல்லா் சுகர் டாடி பயப்படுகிறாரோ.. அப்போதெல்லாம் போலீசை முன்னிறுத்துகிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

E20 protest

இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், மத்திய அரசின் E20 எரிபொருள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூனவல்லா தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் டெல்லி போலீசின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பூனவல்லா முன்னேற முயன்றபோது.. போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

எத்தனால் கலந்த பெட்ரோல் கொள்கையை தீவிரமாக ஆதரிக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சுகர் டாடி என்று பூனவல்லா விமர்சித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இந்த போராட்டத்தில் அவர் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

1. E20க்கு பதிலாக E10 எரிபொருளை மீண்டும் கொண்டுவர வேண்டும். வாகன ஓட்டிகளின் நலன் கருதி இதை செய்ய வேண்டும்.

2. UPI மீதான கூடுதல் கட்டணங்களை நீக்க வேண்டும். UPI பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்படும் மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் கட்டணங்களை முழுமையாக நீக்க வேண்டும்.

3. MCD கமிஷ்னர் கைது செய்யப்பட வேண்டும். அதாவது டெல்லி சத்யா நிகேதன் கட்டிட விபத்து தொடர்பாக டெல்லி மாநகராட்சி கமிஷ்னர் சஞ்சீவ் கிர்வாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்துதான் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பேசிய பூனவல்லா.. E20 என்பது எத்தனால் ஊழல் மற்றும் சர்க்கரை ஊழல் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதிகப்படியான எத்தனால் கலப்பு, இந்தியாவில் உள்ள பழைய வாகனங்களின் என்ஜின்களை படிப்படியாக பாழாக்குகிறது என்றும், இதனால் மக்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தவும் 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் நாடு முழுவதும் E20 கொள்கை வெற்றிகரமாக விரிவுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.

மாருதி சுசுகி, டொயோட்டா, ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள், பல ஆண்டுகள் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த பிறகே.. இந்த எரிபொருள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்றும், இது வாகனங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் பூனவல்லாவின் கருத்துக்களை மறுத்துள்ளனர்.

ஆனால், 2023ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களை வைத்திருக்கும் பொதுமக்கள் இந்த E20 பெட்ரோலால் மைலேஜ் குறைவதாகவும், என்ஜின் பில்டர்கள் அடைப்படுவதாகவும் சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+