டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல்.. ஆன்லைன் கல்வி.. கல்வித்துறை குறித்து நிர்மலா சீதாராமன்!

Google Oneindia Tamil News

டெல்லி: 1-ம் வகுப்பு முதல் 12- வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல் தொடங்கப்படும் என்றும் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Recommended Video

    அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும்- நிர்மலா சீதாராமன் அதிரடி

    5 வது மற்றும் இறுதி கட்ட பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். அவர் தனது அறிவிப்பின் போது, பள்ளிக்கல்விக்காக ஏற்கனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அனுமதி உள்ளது. தற்போது புதிதாக மேலும் 12 தொலைக்காட்சி சேனல்கள் கல்விக்காக உருவாக்க திட்டமிட்டுள்ளளோம். இதன்படி 1-ம் வகுப்பு முதல் 12- வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல் தொடங்கப்படும்.

     Each class to have 1 earmarked TV channel: FM Nirmala Sitharaman

    200 புதிய பாடப்புத்தகங்கள் இ-பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன, மாநிலங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான நேரடியாக உரையாடும் அமர்வுகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கல்வி நேரத்தை பகிர்ந்து கொள்ள மாநிலங்கள் ஒருங்கிணைக்கின்றன. கல்வி தொலைக்காட்சி நாளொன்றுக்கு 4 மணி நேரம் ஒளிபரப்பப்படும்
    ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான உரையாடல் கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.

    6.81 கோடி இலவச எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.. நிர்மலா சீதாராமன் தகவல்6.81 கோடி இலவச எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.. நிர்மலா சீதாராமன் தகவல்

    ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க பிரதம மந்திரி இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவை தொழில்நுட்பம் சார்ந்த கல்வி மையமாக இருக்க வேண்டும்- டிஜிட்டல் / ஆன்லைன் கல்விக்கான அணுகலுக்காக திட்டம் தொடங்கப்பட உள்ளது.. இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 2020 மே 30 க்குள் தானாகவே ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க அனுமதிக்கப்படும்" என்றார்.

    English summary
    Technology-driven education to be the focus- PM eVIDYa programme for multi-mode access to digital/online education to be launched immediately. Top 100 universities will be permitted to automatically start online courses by 30th May 2020: FM
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X