மாலத்தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு!
டெல்லி: மாலத்தீவில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு. பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய மாலத்தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது. மாலத்தீவு நேரப்படி மாலை 5.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

நேற்று இரவு அரபிக்கடலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையை ஒட்டியுள்ள அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது. நேற்று இரவு 9.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக ஆப்கான் - தஜிகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதேபோல் ஆப்கானிஸ்தானில் 4 ஆம் தேதி அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருந்தது. ரிக்டர் அளவுகோலில் 4.4 மற்றும் 4.8 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதேபோல் புத்தாண்டு தினத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்த நிலநடுக்கத்தால் ஜப்பான் நிலைகுலைந்தது.
ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தொடர்ந்து சுனாமி அலைகளும் தாக்கின. ஜனவரி 1 ஆம் தேதியே ஏற்பட்ட இயற்கை பேரிடரால் ஜப்பானில் இதுவரை 62 பேர் பலியாகியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications