இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று
டெல்லி: இந்தியர்கள் உடனடியாக காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியமற்ற பயணங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று இன்று மத்திய அரசு நம் நாட்டு மக்களுக்கு இன்று முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது. இற்கு முக்கிய காரணம் அந்த நாடுகளில் 'எபோலா' நோய்த்தொற்று வேகமாக பரவி வருவது தான். இந்த 'எபோலா' நோய்த்தொற்று என்பது என்ன? பின்னணி என்ன? என்பது பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

'எபோலா' நோய்த்தொற்று பரவல் காரணமாக காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அவசர நிலையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:
''காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் எபோலாவால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளில் உள்ள தற்போதைய நிலைமை மற்றும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளைக் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதனால் அனைவரும் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் இந்த நாடுகளில் எபோலா நோய்த்தொற்றை உலக சுகாதார அமைப்பு அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
எபோலா நோய் என்பது, பண்டிக்புகியோ (Bundibugyo) வைரஸ் வகையால் ஏற்படும். இந்த வைரஸ் பாதித்த வவ்வால், சிம்பன்சிகள், கொரில்லா உள்ளிட்டவற்றின் வழியாக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மனிதர்கள் பாதிக்கப்படும்போது முதலில் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும். இந்த பாதிப்புகள் உடனடியாக குணமாகாது. 2 முதல் 21 நாட்கள் வரை இருக்கும். மேலும் உடலில் சிராய்ப்பு காயங்கள் உருவாகி ரத்த கசிவு ஏற்படும்.
அதுமட்டுமின்றி நோய் பாதித்த ஒருவரின் ரத்தம், எச்சில் இன்னொருவர் மீது படும்போது அவருக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால் எபோலா நோய் பாதித்தவர்களுக்கு தனிமை சிகிச்சை அவசியம். அதுமட்டுமின்றி நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமானது.
ஏனென்றால் இந்த நோயை தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகள் இல்லை. இதுவரை இந்தியாவில் எபோலா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புடன் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications