மே 2-ல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை.. அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!
டெல்லி: மே 2-ல் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து பல நாட்களாகி விட்டது.
8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் இன்னும் ஒரே ஒரு கட்டம் மட்டும் வாக்குப்பதிவு பாக்கி உள்ளது. வருகிற மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அலை, அலையாக கூடிய மக்கள்
தேர்தல் பிரசாத்தின்போது கொஞ்சம், கொஞ்சமாக வேகமெடுத்த கொரோனா தற்போது உச்சக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதுவும் தமிழகத்தில் நிலைமை கட்டுக்குள் வராத வகையில் போய்க் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரத்தின்போது மக்கள் அலை, அலையாக கூடியதால் தமிழகத்தில் இந்த அளவுக்கு கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கொலை குற்றம் சுமத்தலாம்
தமிழகத்தில் கொரோனா வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை நேற்று எதிர்கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது தமிழகத்தில் கொரோனா இந்த அளவுக்கு கொரோனா பரவியதற்கு காரணம் தேர்தல் ஆணையம்தான் காரணம். அரசியல் கட்சியினர் கூட்டத்தை கூட்டியபோது தேர்தல் ஆணையம் எச்சரிக்கவில்லை. கொரோனா காரணமாக மக்கள் உயிரிழப்புக்கு தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் கூட சுமத்தலாம் என்று கடுமையாக விளாசியது.

நீதிபதிகள் எச்சரிக்கை
மேலும் மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு போட வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் வேறு சிலர், ' ஏற்கனவே கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தேர்தல் பிரசாரத்தை தடை விதிக்க வேண்டும் என்று வழக்குகள் வந்தபோது அதனை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு தற்போது மட்டும் உயர்நீதிமன்றம் இப்படி கூறுவது ஏன்?' என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

அரசியல் கட்சிகளுக்கு தடை
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மே 2-ம் தேதி அரசியல் கட்சிகளின் வெற்றி கொண்டாட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், ' தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. அன்றைய தினம் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

வாங்கி வைத்த பட்டாசுகளின் நிலை?
வாக்கு எண்ணும் போது முன்னிலை விவரங்கள் வெளியாகும். முன்னிலை விவரங்கள் வெளியிடும் போதும், வெற்றி விவரம் வெளியாகும் போதும், அதனை அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்தல் உள்பட கொண்டாடங்களில் ஈடுபடக்கூடாது. தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மே 2-ல் தங்கள் கட்சி வெற்றி பெற்றால் அதனை கொண்டாடுவது குறித்து ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களும் கனவில் மிதந்து வருகினறனர். தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அவர்களது கனவை கானல் நீராக மாற்றியுள்ளது. இதனால் வெற்றி கொண்டாடத்துக்காக வாங்கி வைத்த பட்டாசுகளை என்ன செய்வது? என்று தெரியாமல் அரசியல் கட்சியினர் தவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications