டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேட்பாளர்களின் கவனத்திற்கு.. கண்டிப்பாக 26 படிவம் தாக்கல் செய்ய வேண்டும்!

வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது விண்ணப்ப படிவம் 26 கட்டாயம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இதில் இரண்டாம் கட்டத்தில் தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

90 கோடி வாக்காளர்கள்.. களை கட்ட போகும் லோக்சபா தேர்தல் திருவிழா!! 90 கோடி வாக்காளர்கள்.. களை கட்ட போகும் லோக்சபா தேர்தல் திருவிழா!!

தேர்தல் ஆணையர்

தேர்தல் ஆணையர்

இப்போது இந்த தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விதிமுறைகளை செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

படிவம் 26

படிவம் 26

அதில் முக்கியமான விதிமுறை படிவம் 26 ஆகும். பொதுவாக தேர்தலில் ஒரு வேட்பாளர் படிவம் 26 என்ற படிவத்தை தாக்கல் செய்வது அவசியம்.

தகவல்கள்

தகவல்கள்

இந்த படிவத்தில் அவருடைய சொத்துக்கள், கல்வி தகுதிகள், இதற்கு முன்பு அவர் செய்த குற்றவியல் சம்பவங்கள், அதாவது தண்டனை மற்றும் நிலுவையிலுள்ள எல்லா வழக்குகள்) மற்றும் பொது நிலுவை தொகை ஏதாவது இருந்தால் அந்த தகவல்... இப்படி எல்லா தககவல்களையும் ஒன்றாக இணைத்து வழங்குவதுதான் படிவம் 26 என்பது.

நிராகரிப்பு

நிராகரிப்பு

இதனை போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும். எனவே இந்த முறை தேர்தலிலும் இதனை தேர்தல் ஆணையம் பின்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யாவிட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
EC has declared, will have to complete Form 26 (affidavit) to be submitted with nomination papers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X