இன்றைய ஓமிக்ரான் அப்டேட்ஸ்.. மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை!
டெல்லி: நாட்டில் கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷணுடன் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்தியாவில் இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேர நிலவரப்படி ஓமிக்ரான் பாதிப்பு 422 ஆக இருந்தது. இன்றும் பல மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் இன்று மேலும் 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அம்மாநிலத்தில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்த 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்ரு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா இரவு ஊரடங்கு
கர்நாடகாவில் புதியதாக 7 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. டெல்லி, எமிரேட்ஸ், ஜாம்பியா, இங்கிலாந்து, அமெரிக்காவில் இருந்து கர்நாடகா வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு புதிய பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஒடிஷா, ம.பி.
ஒடிஷாவில் மேலும் 4 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து ஒடிஷாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8. மத்திய பிரதேசத்தில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8. தமிழகத்துக்கு வெளிநாட்டில் இருந்து வருகை தருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அத்துடன் ரிஸ்க் நாடுகளில் இருந்து வரும் பயணிகள், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர் எனவும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மே.வங்கத்தில் 4 பேருக்கு பாதிப்பு
மேற்கு வங்கத்தில் புதியதாக 4 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 4 பேரும் இங்கிலாந்தில் இருந்து மேற்கு வங்கம் திரும்பியவர்கள். இமாச்சலப் பிரதேச மாநிலத்தி முதல் ஓமிக்ரான் பாதிப்பு இன்று உறுதியானது. ஹரியானாவில் ஒரு பெண்ணுக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சண்டிகரில் 5 பேருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு தெரியவந்துள்ளது.

நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷனுடன் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். அடுத்த சில மாதங்களில் உத்தரகாண்ட், உ.பி, பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களுக்கான தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அதற்கு முன்னதாக கொரோனா பாதிப்பு, ஓமிக்ரான் தாக்கம் குறித்து நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

டெல்லி ஊரடங்கு
இதனிடையே டெல்லியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஓமிக்ரான் பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில் டெல்லி 2-வது இடத்தில் இருக்கிறது. டெல்லியில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications