Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்ஜெட் 2026: நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.. ஏன் முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக பொருளாதார ஆய்வறிக்கை 2025 - 26 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கையில் வளர்ச்சி, பணவீக்கம், நிதி நிலை உள்ளிட்டவை குறித்த தகவல்களும் பட்ஜெட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய பாலிசிகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

Union Budget Union Budget 2026 Economic Survey

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

11 ஆண்டுகளில் அனைத்து துறையிலும் வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ளதாகவும்
சர்வதேச நெருக்கடிகள் இருந்தபோதும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக வீறுநடை போடும் நாடாக இந்தியா உள்ளதாகவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இரு அவைகளிலும் நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டுக்கு முன்னோட்டமான பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

வேலைவாய்ப்பு, கடன், வர்த்தகம்

அதன்படி இன்று காலை 11 மணியளவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதனையடுத்து கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

2027 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.8% முதல் 7.2% வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. இது முன்பு மதிப்பிடப்பட்ட 7.4% ஐ விட சற்று குறைவாகும்.

நிதிப்பற்றாக்குறை இலக்கு

நடுத்தர கால வளர்ச்சி இலக்கு என்பது 7% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியை உறுதிப்படுத்தும். நிதிப்பற்றாக்குறையை பொறுத்தவரை FY25 4.8% ஆகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்ப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பது எளிதாகும்.

FY26 நிதிப்பற்றாக்குறை இலக்கு 4.4%. எனவே இது வெளிநாட்டு முதலீடுகளை (FPI) ஈர்க்கும். GST சீர்திருத்தங்கள் மூலம் வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் FMCG மற்றும் ஆட்டோமொபைல் துறைகளுக்குச் சாதகமாக பார்க்கப்படுகிறது.

FY27 வளர்ச்சி 6.8-7.2% ஆகக் கணிப்பு.. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும். உணவு அல்லாத வங்கி கடன் 10 முதல் 14% உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொழில்துறை விரிவாக்கத்திற்கு (Capex) உதவும்.

ஐரோப்பியாவுடன் ஒப்பந்தம்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் (FTA) ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. பணவீக்கம் குறைவாக உள்ளதால், RBI வட்டி விகிதங்களைக் குறைக்கலாம். அரசின் பொதுக்கடன் 7.1% ஆகக் குறைந்துள்ளதால், வங்கிகளுக்கான அபாயத்தைக் குறைக்கிறது.

பொருளதார விவகாரங்கள் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த பொருளாதார ஆய்வறிக்கயை தயாரிக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி, பணவீக்கம், நிதிநிலை, வேலைவாய்ப்பு, கடன், வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி, இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை பொருளாதார ஆய்வறிக்கை விரிவாக மதிப்பாய்வு செய்யும் வகையில் அமைந்து இருக்கும்.

7.4% வளர்ச்சியை பதிவு செய்யும்

மேலும், பட்ஜெட்டில் முன்வைக்கப்படும் கொள்கை முன்னுரிமைகளுக்கான போக்கை பிரதிபலிப்பதாக இது அமைந்து இருக்க கூடும். இந்தியா நடப்பு ஆண்டில் 7.4% வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொருளாதார ஆய்வில் 6.3 - 6.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டு இருந்தது.

அரசின் நிதி செயல்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தின் நிலை குறித்து மதிப்பீடு செய்யும் அதிகாரப்பூர்வ அறிக்கையாக பொருளாதார ஆய்வு (Economic Survey) விளங்குகிறது. மேலும், மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக எதிர்கால கொள்கை மாற்றங்கள் குறித்த முன்னோட்டத்தையும் பொருளாதார ஆய்வறிக்கையே வழங்குகிறது.

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பொருளாதார ஆய்வறிக்கையை விளக்கி பேச உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+