பொருளாதார நிச்சயமற்ற தன்மை.. வரும் நிதியாண்டு நெருக்கடி மிகுந்து இருக்கும்! பிடிஆர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான, பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்பு உள்ளது.. வரும் நிதியாண்டு நெருக்கடி மிகுந்து இருக்கும் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

2022- 23ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற குறளை மேற்கோள்காட்டி தனது பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

பட்ஜெட் தாக்கலின் போது நிதிநிலை விவரங்களை பிடிஆர் வெளியிட்டார். தமிழ்நாட்டில் வருவாய், இழப்பு குறித்த விவரங்களை பிடிஆர் விவரமாக வெளியிட்டார்.

பிடிஆர் உரை

பிடிஆர் உரை

பிடிஆர் தனது உரையில், பட்ஜெட்டில் சமூக நல திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார். மக்களுக்கு எங்கள் அரசு மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்தது. வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

பட்ஜெட் உரை

பட்ஜெட் உரை

மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். சமூகத்தின் அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி திமுகவிற்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தை காட்டுகிறது. தமிழ் சமுதாயம் முதலமைச்சர் மீது கொண்டுள்ள அளவு கடந்த நம்பிக்கையை இந்த வெற்றி பறைசாற்றுகிறது

 ஒன்றியம் - மாநிலம்

ஒன்றியம் - மாநிலம்

இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாகும். மாநில உரிமைக்காக திமுக தொடர்ந்து போராடும். இந்தியாவில் கூட்டாட்சி உரிமையை சீர்குலைக்க தொடர் முயற்சி நடைபெறுவது வருந்தத்தக்கது. மாநில உரிமைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். இதற்காக தனி குழு அமைக்கப்படும். ஒன்றிய, மாநில நிதி உறவுகளை வழிநடத்த சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீடு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. ஜி.எஸ்.டி இழப்பீடு கிடைக்காமல் போனால், மாநிலத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது. வருவாய் பற்றாக்குறை 7000 ஆயிரம் கோடி ரூபாய் குறையும். 4.16ல் இருந்து 3.08 சதவிகிதமாக வருவாய் பற்றாக்குறை குறையும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இது நம்பிக்கை அளிக்கும் செய்தி. இருப்பினும், உக்ரைன் போரால் பொருளாதார மீட்டெடுப்பு தடையாக உள்ளது. உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான, பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்பு உள்ளது.. வரும் நிதியாண்டு நெருக்கடி மிகுந்து இருக்கும். தமிழக அரசின் மின்பகிர்மான கழகத்திற்கு கொடுத்த மானியம் அகவிலைப்படி உயர்வின் தாக்கம் பட்ஜெட்டில் இருக்கும். வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும். இதற்கு ஏற்றபடி திட்டங்களை வகுத்து வருகிறோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+