ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மாயம்! பிஎம்டபிள்யூ காரை ஓட்டிச்சென்ற அமலாக்கத்துறை! பரபரப்பு
டெல்லி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திடீரென மாயமாகி உள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கிடையே தான் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது பிஎம்டபிள்யூ காரை ஓட்டிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார்.

இந்நிலையில் தான் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கி உள்ளார். நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இன்னும் விசாரணை முடியவில்லை. இதையடுத்து மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு ஆஜராகக்கோரி சமீபத்தில் சம்மன் அனுப்பியது. அதற்கு அவர் ஜனவரி 31ம் தேதி மதியம் 1 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் விசாரணை நடத்தி கொள்ளலாம் எனக்கூறி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதனை அமலாக்கத்துறை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் கடந்த 27 ம் தேதி ஹேமந்த் சோரன் ராஞ்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றதாகவும், விரைவில் அவர் ராஞ்சி திரும்புவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும் அவர் எங்கு சென்றார் என்பது பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து 18 மணிநேரமாக ஹேமந்த் சோரன் மாயமாகவிட்டதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து டெல்லியில் உள்ள இல்லத்தில் ஹேமந்த் சோரன் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றனர். அங்கு ஹேமந்த் சோரன் உள்பட யாரும் இல்லை. இதையடுத்து வீட்டில் 13 மணிநேரம் வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.
ஆனாலும் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது தரப்பினர் யாரும் வரவிலை்லை. இதையடுத்து வீட்டின் வளாகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவரது பிஎம்டபிள்யூ காரை ஓட்டி சென்றனர். மேலும் வீட்டில் இருந்த ஒரு பேக்கில் ஆவணங்களை அதிகாரிகள் தூக்கி சென்றனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications