ஆடிப்போன ஆம்ஆத்மி.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்.. டெல்லியில் பரபர
டெல்லி: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பரில் அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதில் ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றது.

அப்போது டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றங்கள் நடந்தது, இந்த ஊழல் மூலம் கிடைக்கும் பணத்தை தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சி பயன்படுத்தியதையும் சிபிஐ கண்டுபிடித்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கை கையில் எடுத்தது.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்தூறை சம்மன் அனுப்பியது. ஆனால் தேர்தல் பிரசாரத்தை காரணம் காட்டி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் 21 ஆம் தேதி வியாழக்கிழமை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளது. சம்மன்கள் அனுப்பப்பட்டு ஒரு நபர் மூன்று முறை ஆஜராகாமல் இருந்தால் அதன்பிறகு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை அமலாக்கத்துறையால் பிறப்பிக்க முடியும். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது ஆம் ஆத்மி கட்சியை அதிர வைத்துள்ளது.
கெஜ்ரிவால் கைதானால் சிறையில் கேபினட் கூட்டத்தை நடத்துவோம் என்று ஏற்கனவே அந்தக் கட்சியினர் கூறியிருந்தனர். இந்த நிலையில், இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என கெஜ்ரிவால் விமர்சித்து இருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications