பயங்கர ட்விஸ்ட்.. பெரிய புள்ளியை டெல்லியில் இறக்கிய எடப்பாடி! ஓபிஎஸ் மிஸ் பண்ணிட்டாரே.. முடிஞ்சது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைரமுத்துவின் வாதங்கள் முடிந்துள்ளன.

இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பின் வாதங்கள் பாதி முடிந்துள்ளன. இன்னும் மீதி வாதங்கள் அவர் செய்ய வேண்டும். இது போக எடப்பாடி பழனிசாமியும் வழக்கில் வாதங்களை வைக்க வேண்டும்.

வாதங்கள்

வாதங்கள்

இந்த வாதங்கள் வரும் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட உள்ளன. கடந்த விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், அதிமுக பொதுக்குழு சட்டப்படி கூடவில்லை. பொதுக்குழுவில் விதிகள் மீறப்பட்டு உள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பின்னர் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை சட்டப்படி கூட்டப்படவில்லை. கட்சியில் தொண்டர்களுக்கே அதிக உரிமை உள்ளது. திமுகவிலிருந்து பொதுகுழு உறுப்பினர்களால் வெளியேற்றப்பட்டதால் தான் எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். அப்போதே பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே முடிவு எடுப்பதை எம்ஜிஆர் எதிர்த்தார். எம்ஜிஆருக்கு அது கசப்பான அனுபவமாகவே இருந்தது.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

அதனால் கட்சியில் தொண்டர்களுக்கு அதிக பலம் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நினைத்தார். எப்போதும் கட்சி முடிவுகளை அடிப்படை தொண்டர்கள் மூலமே எடுக்க வேண்டும் என்பதை அவர் விரும்பினார். அதனால் தொண்டர்கள் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவும் இதைதான் கடைபிடித்தார். எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கிய போதும் இதேபோல் உருவாக்கினோம். அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு மூலமாக இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி உள்ளார். எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை, அவரின் எண்ணத்தை, கட்சி உருவாக்க எம்ஜிஆர் வைத்து இருந்த மூல காரணத்தையே எடப்பாடி மீறிவிட்டார், என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது.

 வைரமுத்து தரப்பு

வைரமுத்து தரப்பு

இன்னொரு பக்கம் வைரமுத்து தரப்பு வைத்த வாதத்தில், கட்சியின் அடிப்படை விதியையே எடப்பாடி மாற்றிவிட்டார். பொதுச்செயலாளர் தேர்தலில் அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாத வகையில் எடப்பாடி விதிகளை மாற்றி உள்ளார். கட்சியின் பை லாவில் எடப்பாடி கை வைத்துள்ளார். 10 வருடங்களுக்கு கட்சியில் இருந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்று எடப்பாடி கொண்டு வந்துள்ளார். தான் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக எடப்பாடி இப்படி விதிகளை மாற்றி உள்ளார். ஜெயலலிதா மறைந்த பின்பே பொதுச்செயலாளரை தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

தவறு

தவறு

கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தற்போது முடிவுகளை எடுக்க முடியும். தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது, கட்சி தலைமை அலுவலகத்தை கட்டுப்படுத்துவது, சொத்துக்களை கட்டுப்படுத்துவது போன்ற முடிவுகளை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே எடுக்க முடியும். ஆனால் இந்த பதவியை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி உள்ளார். குறுக்கு வழியில் வந்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. அதற்கு என்று இருந்த விதிகளை எல்லாம் எடப்பாடி தூக்கி எறிந்து விட்டார். விதிகளை மாற்றிவிட்டு தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி கூறுகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை "குறுக்கு வழியில்" எடப்பாடி பழனிச்சாமி பெற முயல்கிறார். திமுகவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டார் என்பதற்கு ஏதாவது ஆதரவு இருக்கிறதா? இதை காரணம் காட்டி எடப்பாடியை நீக்கி உள்ளனர். அதற்கு என்ன ஆதாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலை அங்கீகரித்து உள்ளது, என்று வைரமுத்து தரப்பு வாதம் வைத்துள்ளது.

வாதம்

வாதம்

இந்த நிலையில்தான் எடப்பாடி இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த முறை வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பெரிய டீமையே களமிறக்கி உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் பல மூத்த வழக்கறிஞர்கள் எடப்பாடிக்காக களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை எடப்பாடி சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராக இருக்கிறார். முகுல் ரோத்தகி மிக முக்கியமான கேஸ்களில் மட்டுமே ஆஜராவது வழக்கம். இந்த நிலையில் அவரை எடப்பாடி களமிறக்கி உள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. முகுல் ரோத்தகி இதில் அதிமுக வேட்பாளர் என்ற பெயரில் ஆஜராக உள்ளார்.

அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர்

அதாவது அதிமுக சார்பாக இவர் வாதாடுவார். அதிமுகவின் விதிகளை கூறுவார். ஆனால் அந்த விதிகளை எடப்பாடிக்கு ஆதரவாக இவர் குறிப்பிட இருக்கிறார். வழக்கு இதுவரை ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செல்வது போல தோற்றம் உள்ளது. காரணம் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மட்டுமே வாதங்களை வைத்து உள்ளது. செவ்வாய்க்கிழமைதான் வழக்கில் எடப்பாடி தரப்பு வாதம் வைக்கும். அப்போது வழக்கில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் பல மூத்த வழக்கறிஞர்களை களமிறக்கி இருந்தது. ஆனாலும் அவர்கள் தரப்பில் முகுல் ரோத்தகி அளவிற்கு பெரிய வழக்கறிஞர்கள் களமிறக்கப்படவில்லை. ஓ பன்னீர்செல்வம் இங்கே கொஞ்சம் மிஸ் செய்துவிட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+