சசிகலா கட்சியுடன் கூட்டணியா.. அமித்ஷாவுடன் ஆலோசித்தது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அமித்ஷாவுடன் எதுவும் பேசவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் சில கட்சிகளுடன் பேசி வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்தை எட்டி இருக்கிறது. மதுரையில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் முதற்கட்ட ஆலோசனையில் ஈடுபட்ட சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி வந்தார். வழக்கமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் டெல்லி வருவார்கள்.

Edappadi Palaniswami aiadmk Sasikala amitshah tamilnadu assembly election 2026

ஆனால் இம்முறை அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தனியாக வந்திருந்தார். இதனால் அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீட்டில் இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின் நேற்றிரவு டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதன்பின் இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசினோம். தேர்தலில் எப்படி செயல்பட வேண்டுமெனவும் ஆலோசனை நடத்தினோம்.. அதேபோல் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும் சில கட்சிகள் இணையக் கூடும்.

சிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அமித்ஷாவுடன் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடி மதுரை வந்த போது பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதனால் இம்முறை தனியாக டெல்லி வந்துள்ளேன். எங்களை பொறுத்தவரை மிக சுமூகமாக எழுச்சியான கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.. திமுக கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது. ஏனென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா, இல்லையா என்று விவாதித்து வருகின்றனர். விரைவில் தொகுதி பங்கீடு தொடங்கப்படும். இந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+