ஆந்திராவில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல்.. ஒடிசா உள்பட மேலும் 3 மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிப்பு
டெல்லி: ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த வேளையில் அவர்கள் லோக்சபா தேர்தல் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி, ரிசல்ட் தேதிகளை அறிவித்னர். அதேபோல் லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா: ஆந்திராவில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். இந்த மாநிலத்தில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 88 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 159 தொகுதிகளில் வென்றது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 15 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வென்றார். காங்கிரஸ், பாஜக கட்சிகள் வெற்றி பெறவில்லை.
ஆந்திரா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் 11ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 18ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு செய்ய மார்ச் 25 கடைசி நாளாகும். மனு மீதான பரிசீலனை என்பது ஏப்ரல் 26ல் நடக்கும். மனு வாபஸ் பெற ஏப்ரல் 26ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் என்பது மே மாதம் 13ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. மாறாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா: அதேபோல் ஒடிசாவில் இப்போது பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். இந்த மாநிலத்தில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி ஆட்தனித்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சி 112 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.
பாஜக 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். ஒடிசா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 24ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒடிசாவில் வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 18ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு செய்ய மார்ச் 25 கடைசி நாளாகும். மனு மீதான பரிசீலனை என்பது ஏப்ரல் 26ல் நடக்கும். மனு வாபஸ் பெற ஏப்ரல் 26ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் என்பது மே மாதம் 13ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
அருணாச்சல பிரதேசம்: மேலும் அருணாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பேமா காண்டு உள்ளார். இந்த மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி பெரும்பான்மையை பெற 31 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2019 தேர்தலில் பாஜக 53 இடங்களில் வென்றது. பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த என்பிபி 2 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 3 இடங்களை வென்ற நிலையில் சுயேச்சை ஒரு தொகுதியில் ஜெயித்து இருந்தார். அருணாச்சல பிரதேச மாநில சட்டசபைகளின் 5 ஆண்டு சட்டசபையின் பதவிக்காலம் ஜுன் மாதம் 2ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் வேட்பு மனு மார்ச் 20ம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். மனு மீதான பரிசீலனை மார்ச் 28 ல் நடக்கும். அதன்பிறகு மனு வாபஸ் பெற மார்ச் 30 கடைசி நாளாகும். பிறகு தேர்தல் என்பது ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
சிக்கிம்: மேலும் சிக்கிம் மாநிலத்தில் இப்போது பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக எஸ்கேஎம் கட்சியை சேர்ந்த பிரேம் சிங் தமாங் உள்ளார். இங்கு மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 17 தொகுதிகளில் ஒரு கட்சி வெல்ல வேண்டும். கடந்த 2019 சட்டசபை தேர்தல்களில் எஸ்கேஎம் கட்சி 19 இடங்களிலும், பாஜக 11 தொகுதிகளிலும் வென்றது. எஸ்டிஎப் கட்சி ஒரு தொகுதியை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் வெல்லவே இல்லை. சிக்கிம் மாநில சட்டசபைகளின் 5 ஆண்டு சட்டசபையின் பதவிக்காலம் ஜுன் மாதம் 2ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலில் வேட்பு மனு மார்ச் 20ம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். மனு மீதான பரிசீலனை மார்ச் 28 ல் நடக்கும். அதன்பிறகு மனு வாபஸ் பெற மார்ச் 30 கடைசி நாளாகும். பிறகு தேர்தல் என்பது ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தேர்தல் முடிவு: இந்த 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளும் ஜுன் மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளன. அன்றைய தினம் இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதனுடன் சேர்ந்து 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications