வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடியா? சான்சே இல்லை.. மறுக்கும் தேர்தல் ஆணையம்
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடுகளும் செய்ய முடியாது என்று திட்ட வட்டமாக மறுப்பு தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், லண்டனில் நிகழ்ச்சி நடத்திய சுஜா மீது டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தே பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தன. அதனால், வாக்குச் சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
அண்மையில் முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தது. அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது கடந்த காலங்களில் எழுப்பப்பட்ட விமர்சனங்கள் குறித்து பாஜக எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியது.

அமெரிக்க நிபுணரின் தகவல்
இந் நிலையில் லோச்பா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியுமா? என்பது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணர் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் லண்டனில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் சிபில் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நேரலை நிகழ்ச்சி
அந்த நிகழ்ச்சியில், சைபர் நிபுணரான சையது சுஜா என்பவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேரலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி மோசடி செய்வது என்பதை செய்து காட்டினார். அதோடு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இயந்திரங்களில் மோசடி செய்யப் பட்டதாகவும் அவர் கூறினார். தன்னால் மோசடி செய்ததற்கான ஆதரங்களை தர முடியும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் மறுப்பு
இந் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து வெளியான செய்திக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை செய்துகாட்டும் நிகழ்ச்சி லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

முறைகேடு செய்ய முடியாது
உள்நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மோதலில் தேர்தல் ஆணையத்துக்கு நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில், தேர்தலில் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்ற உண்மையில் தேர்தல் ஆணையம் மிகவும் உறுதியாக உள்ளது.

பாதுகாப்பான முறை
எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியாவும் மிகவும் கண்டிப்பான மேற் பார்வையில், மிகவும் பாதுகாப்பாக தயாரிக்கின்றன. இதன் தயாரிப்பின் அனைத்து நிலைகளிலும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை
அவற்றை 2010ம் ஆண்டில் அமைக்கப்பட்ட பிரபல தொழில்நுட்ப குழு நிபுணர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக எந்தவிதமான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications