அதிமுக வழக்கு: “நீதிமன்ற தீர்ப்பு அப்படி வந்ததால் தான் நாங்கள் ஏற்றோம்”.. தேர்தல் ஆணையம் பரபர தகவல்!
டெல்லி: அதிமுக கட்சி விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம் என தேர்தல் ஆணையம் அதில் தெரிவித்துள்ளது.
அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதிமுக கட்சி விதிகள் மாற்றம் தொடர்பான இந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், கட்சி விதிகள் மாற்றத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த முடிவு என்பது, எதிர்வரும் காலத்தில் நீதிமன்றங்களின் உத்தரவிற்கு கட்டுப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில்தான், அவரை நாங்கள் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து, கட்சி திருத்த விதிகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது என தேர்தல் ஆணையம் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த தகவல் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டார்.
அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் தான் தற்போது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதன் அடிப்படையில் தான் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்துள்ளோம். பொதுக்குழுவை அங்கீகரித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே கட்சி விதிகள் மாற்றத்தை அங்கீகரித்துள்ளோம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications