ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியை மட்டும் இன்று அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை மட்டும் இந்திய தேர்தல் ஆணையத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவித்தார். ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் அக்டோபர் 1-ந் தேதியும் தேர்தல் நடைபெறும். ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதேநேரத்தில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவில்லை.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளின் பதவி காலங்கள் அடுத்த 6 மாதங்களில் முடிவடைய உள்ளன. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். ஹரியானாவில் அக்டோபர் 1-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications