தேர்தல் விதிகள் திருத்தம்! மக்கள் கருத்து மிக முக்கியம்.. உச்சநீதிமன்றத்தை நாடிய காங்கிரஸ்!
டெல்லி: தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், திருத்தம் செய்வதற்கு முன்னர் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும் என்று கூறி, திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்திருக்கிறது.
சமீபத்தில் ஹரியானாவில் நடைபெற்ற மேயர் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரியே முறைகேட்டில் ஈடுபட்டிருந்தார். இந்த விவகாரம் சிசிடிவி காட்சி மூலம் வெளிவந்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்து, அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் இனி வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்படும் சிசிடிவி கேமராவின் காட்சிகள் பொது வெளியில், மக்கள் பார்வைக்கு வழங்கப்படாது என்று தேர்தல் ஆணையம் திருத்தங்களை செய்து அறிவிப்பை விட்டது.

இதற்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், “வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.
குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பயம் ஹரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது.
தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியிருந்தார்.
அதேபோல சிபிஎம், “தேர்தல் நடத்துவதில் வெளிப் படைத்தன்மையை உத்தரவாதப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசி, டிஜிட்டல் சாதனங்களையும், வீடியோக்களையும், எலக்ட்ரானிக் பதிவுகளையும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பயன்படுத்திட அனுமதித்திருந்ததை தடுத்திடும் விதத்தில் இப்போது மோடி அரசாங்கம் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தங்களைக் கொண்டுவர முன்மொழிவினை அனுப்பியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் கடும் ஆட்சேபணையைத் தெரிவித்துக்கொள்கிறது.
புதிய விதிகளை வரைவு செய்கையில் அரசாங்கம் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசனைகள் மேற்கொண்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து, அவ்வாறு அது ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, கடந்த காலங்களில் மேற்கொண்டதைப்போல அரசியல் கட்சிகளுடன் எவ்விதமான கலந்தாலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை.
தேர்தல் நடத்துவது தொடர்பாக மனுதாரரின் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் அரசாங்கத்தின் வாதம் ஆச்சரியமான ஒன்று. இந்த அணுகுமுறை தேர்தல் நடத்துவது தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகள் தலையீட்டை முற்றிலும் விலக்கியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் கடந்த காலங்களில் என்னவெனில், குறிப்பாக மக்களவைக்குத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில், திரிபுராவில், பல வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மோசடிகள் (rigging) வீடியோ எடுக்கப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அந்த வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.
இதுபோல் அம்மாநிலத்தில் உள்ள இரு தொகுதிகளிலும் அநேகமாக பாதியளவிலான வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல்கள் நடந்தன. இந்தக்காலத்தில், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தேர்தல் நடை முறைகளிலும் ஒரு பிரிக்கப்பட முடியாத அங்கமாக மாறியிருக்கக்கூடிய சூழ்நிலை யில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு படுபிற்போக்கு நடவடிக்கையையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் ” என வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கிறிஸ்தவராக மாறினால் பட்டியல் ஜாதி அந்தஸ்து + உரிமை கிடையாது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications