யார் அந்த இந்திய தொழிலதிபர்கள்? எலான் மஸ்கின் பகீர் குற்றச்சாட்டுக்கு.. மத்திய அரசு சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் ஸ்டார்லிங்க் இன்டெர்நெட் வசதியை கொடுக்க எலான் மஸ்க் முயன்று வருகிறார். இந்தியாவிலும் ட்ரை செய்தார். ஆனால் அரசு தற்போது வரை அனுமதி வழங்கவில்லை. இதனால் டென்ஷன் ஆன அவர், சில தொழிலதிபர்கள் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்குவதில் தடையாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது மத்திய அரசு இதற்கு விளக்கமளித்திருக்கிறது.

"இந்திய மக்களிடம் ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக சில தொழிலதிபர்கள் எங்களை தடுத்து வருகின்றனர்" என்று எலான் மஸ்க் தனது x பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

Elon Musk

இப்படி இருக்கையில்தான் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது, "இந்தியாவை பொறுத்தவரை தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற நடைமுறை தொடர்கிறது. இதே நடைமுறைதான் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவை வழங்குவதிலும் பின்பற்றப்படுகிறது. சாட்டிலைட் மூலம் இன்டெர்நெட் விநியோகிக்க 3 நிறுவனங்கள் உரிமம் பெற்றிருக்கின்றன. இவை மூன்றும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை நடைமுறையில் இருக்கின்றன.

3 நிறுவனங்களும் பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலை முடிந்த பின்னர்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து அடுத்தக்கட்டத்திற்கு போக முடியும். எனவே இந்தியாவின் விதிமுறையில் அல்லது செயல்பாட்டில் பாரபட்சம் இருப்பதாக சொல்வது ஆதாரமற்றது, தவறான புரிதலை அடிப்படையாக கொண்டது" என்று கூறியிருக்கிறது.

மத்திய அரசின் பதில் வெளியில் இருந்து பார்க்க ஓகே போல தெரிந்தாலும்.. உள்ளுக்குள் கேள்வியை எழுப்பியிருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். அதாவது, இந்தியாவில் சாட்டிலைட் இன்டெர்நெட் சேவையை வழங்குவதில் 'சில' நிறுவனங்கள்தான் இடையூறாக இருப்பதாக எலான் மஸ்க் சொன்னார். இதில் அரசை எந்த இடத்திலும் அவர் கை காட்டவில்லை. அப்படி இருக்கும்போது அரசு ஏன் தானாக முன் வந்து பதிலளிக்க வேண்டும்? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

BSNL-க்கு இழைக்கப்பட்ட துரோகம்

இன்னொரு கேள்வி, மத்திய அரசின் பதிலில் இருந்துதான் எழுந்திருக்கிறது. அதாவது நாங்கள் நியாயமான, பாரபட்சமற்ற முறையை பின்பற்றுகிறோம் என மத்திய அரசு சொல்கிறது. உண்மையில் அப்படித்தான் நடந்துக்கொண்டதா? நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்க கடந்த 2022ம் ஆண்டு ஏலம் நடைபெற்றது. இதில் Jio, Airtel போன்ற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் BSNL நிறுவனத்திற்கு 2025ம் ஆண்டுதான் அனுமதி வழங்கப்பட்டது. மத்திய அரசு சொல்வதை போல நியாயமான, பாரபட்சமற்ற நடைமுறை இதில் எங்கு இருக்கிறது? எலான் மஸ்க் விஷயத்திலும் இதே கதையைதான் விடுகிறதா அரசு? என்று நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+