இந்தியா வரும் எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்' இன்டர்நெட்.. மாதம் ரூ.2,500 டூ ரூ.3,000 வரை தான்!
டெல்லி: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான கட்டண விவரம் வெளியாகி உள்ளது. முதலில் மாதாந்திர கட்டணம் ரூ.8,600 இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மாதத்திற்கு ரூ. 2,500 முதல் ரூ. 3,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகின் பெரும் கோடீஸ்வரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் தான் உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அதில் ஒன்று தான் செயற்கைகோள் இணைய சேவை வழங்கும் தொழில்.

எலான் மஸ்க் ‛ஸ்பேஸ்எக்ஸ்'என்ற விண்வெளி நிறுவனத்தின் மூலமாக ‛ஸ்டார்லிங்' என்ற பெயரில் செயற்கைகோள் மூலமாக இணையதள சேவைகளை வழங்கி வருகிறார். இந்த இணையதள சேவைகள் ஒவ்வொரு நாடுகளுக்கும் விரிவடைந்து வருகிறது.
இந்த ‛ஸ்டார்லிங்' இணையதள தேவை விரைவில் நம் நாட்டிலும் அறிமுகம் ஆக உள்ளது. இதன்மூலம் குக்கிராமங்கள், மலை பிரதேசங்கள் என்று அனைத்து இடங்களிலும் இணையதள சேவைகள் கிடைக்கும். இந்நிலையில் தான் ‛ஸ்டார்லிங்' இணையதள சேவையை நம் நாட்டில் பயன்படுத்த வேண்டும் என்றால் மாதாந்திர கட்டணமாக ரூ.8,600 செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது அந்த அறிவிப்பு நீக்கப்பட்டது.
இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியான அறிவிப்பு. இதனால் அந்த அறிவிப்பு டெலிட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி ‛ஸ்டார்லிங்' இன்டர்நெட் சேவையை இந்தியாவில் பயன்படுத்தும் ஒருவருக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பினும் தற்போதைய கட்டணம் என்பது அதிகாரப்பூர்வமானது இல்லை. நம் நாட்டில் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கும் அங்கீகாரம் மற்றும் மத்திய தொலை தொடர்பு துறை ஒதுக்கும் ஸ்பெக்ட்ரம் உள்ளிட்டவற்றுக்கு பிறகு தான் அதிகாரப்பூர்வ கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் மாதாந்திர கட்டணம் என்பது ரூ.2,500 முதல் ரூ.3,500க்கும் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங் சேவை நம் நாட்டில் அறிமுகம் ஆகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஏனென்றால் இன்னும் ஸ்பெக்ட்ராம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பாதுகாப்பு சார்ந்த அனுமதியை இன்னும் ஸ்டார்லிங் பெறவில்லை. இது இன்னொரு காரணமாக உள்ளது. இருப்பினும் அனைத்து வகையான அனுமதி மற்றும் மத்திய அரசின் ஸ்பெக்ட்ரம் பெற்று விரைவில் ஸ்டார்லிங் இணையதள வசதியை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. அதன்பிறகு விமானம், கடல்சார் துறை, அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இந்த இண்டர்நெட் சேவைகளை பெற முடியும்.
ஸ்டார்லிங் நிறுவனத்தை எடுத்து கொண்டால் 2 வகையான இணைய சேவைகளை வழங்கி வருகிறது. ஒன்று GMPCS (Global Mobile Personal Communication by Satellite) உரிமம் வகையிலான இண்டநெட் சேவை. இது நேரடியாக மக்களுக்கு இண்டர்நெட் சேவையை வழங்கும்.
இன்னொன்று VSAT (Very Small Aperture Terminal) உரிமம். இது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும். தற்போது ஸ்டார்லிங் நம் நாட்டின் தலைமை பிரிவை உருவாக்கும் பணியை தொடங்கி உள்ளது. தலைவர் தேர்வு, நிதித்துறை சார்ந்த நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!












Click it and Unblock the Notifications