இந்தியாவில் ஸ்டார்லிங்கிற்கு அனுமதி.. 600 ஜிபி வேகத்தில் சாட்டிலைட் இணைய சேவை! களத்தில் எலான் மஸ்க்
டெல்லி: இந்தியாவில் எப்போது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இணையச் சேவை தொடங்கும் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. இதற்கிடையே இந்தியத் தேசிய விண்வெளி ப்ரோமோஷன் மற்றும் அங்கீகார மையம் ஸ்டார்லிங் மூலம் இணையச் சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான அனுமதியாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் ஸ்டார்லிங் தனது இணையச் சேவையைத் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில் பிரதானமானது தான் ஸ்டார்லிங். சாட்டிலைட்களை வைத்து அதன் மூலம் இணையச் சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும். பல நாடுகளில் இந்த சாட்டிலைட் இணையச் சேவை வெற்றிகரமாக இருந்து வருகிறது. குறிப்பாகக் கிராமப்புற மக்களுக்கு இது மிகப் பெரியளவில் உதவுகிறது.

ஸ்டார்லிங்க்
இதற்கிடையே இந்தியாவின் டிஜிட்டல் துறையில் புதிய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்தியத் தேசிய விண்வெளி ப்ரோமோஷன் மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டத்தைப் பயன்படுத்தி இணையச் சேவை வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்த அங்கீகாரம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து வருடங்களுக்கு அல்லது ஜென்1 செயற்கைக்கோள் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் வரை செல்லுபடியாகும். இந்தியாவின் தொலைதூர மூலைகளுக்கும் அதிவேகச் செயற்கைக்கோள் இணையத்தைக் கொண்டு வருவதில் இது ஒரு முக்கியமான படியாக இருக்கும்.
அதேநேரம் இது முதற்கட்ட அனுமதி தான் ஸ்டார்லிங்க் சேவைகளின் வெளியீடு, அரசு துறைகளிடமிருந்து பெறவேண்டிய அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகள், ஒப்புதல்களை முடித்த பிறகே அதன் தனது சேவையைத் தொடங்கும். ஸ்டார்லிங்க் ஜென்1 சாட்டிலைட் என்பது 540 முதல் 570 கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் 4,408 செயற்கைக்கோள்களைக் கொண்ட ஒரு உலகளாவிய செயற்கைக்கோள் கூட்டமாகும்.
600 ஜிபி வேகம்
இந்தச் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் சுமார் 600 Gbps வேகத்தில் இணையச் சேவையை வழங்க முடியும். இதன் மூலம் இணைய வசதிக் குறைவாக உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு பக்காவாக இணையச் சேவை கிடைக்கும். கிராமங்கள் மட்டுமின்றி நம்பகமான அதிவேக இணைப்பு தேவைப்படும் நகர்ப்புற யூசர்களுக்கும் கூட இது உதவும். இந்தியாவில் விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கவும் ஊக்குவிப்பதற்கும் IN-SPACe அனுமதி ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ஏன் முக்கியம்
இந்த முடிவு அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு உள்கட்டமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்யும் என்றும் டிஜிட்டல் பிளவைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் இது பெரியளவில் ஊக்கமளிப்பதாக இருக்கும்.
ஸ்டார்லிங்க் சேவை மூலம் பல கோடி இந்தியர்களுக்கு, குறிப்பாக தரைவழி பைஃபர் இணைய உள்கட்டமைப்பு குறைவாக உள்ள அல்லது பைஃபர் சேவை இல்லாத பகுதிகளிலும் அதிவேக இணையச் சேவை கிடைக்கும். இதன் மூலம் வீடுகள், வணிகங்கள், பள்ளிகளுக்குத் தடையற்ற பிராட்பேண்ட் அணுகலை வழங்க முடியும். இது அடுத்த தலைமுறைக்கு மிகப் பெரிய புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
கண்காணிக்கப்படும்
அதேநேரம் தேசியப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஸ்டார்லிங்க் முழுமையாக இணங்க வேண்டும் என்றும் இதை உறுதி செய்ய ஸ்டார்லிங்க் செயல்பாடுகளும் அனைத்தும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்றும் IN-SPACe செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
செயற்கைக்கோள்கள் இப்போது உலகின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக மாறி வருவதால், இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.. இந்த அனுமதி மூலம் சாட்டிலைட் மூலம் இணையச் சேவை வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இது, மேலும் இணைக்கப்பட்ட மற்றும் டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications