இந்தியாவில் இப்படி எல்லாம் நடக்குதா? கடுப்பான எலான் மஸ்க்.. டிரம்ப் போட்ட ரூல்.. என்ன நடந்தது?
டெல்லி: அமெரிக்காவின் நிதி இந்தியாவில் உள்ள 3ம் பாலின மருத்துவமனைகளுக்கு செலவு செய்யப்படுவதாக DOGE தலைவர் எலான் மஸ்க் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அமெரிக்கா பொதுவாக உலக நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும். பல திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு நிதி உதவி வழங்கும். இதை சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதி என்று அழைப்பார்கள்.
இந்த நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதியை முடக்கும் முடிவை எடுத்து உள்ளார். இதனால் உலக வளர்ச்சி எதற்கும் அமெரிக்கா நிதி உதவி அளிக்காது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பெற்று வந்த நிதியும் பாதிக்கப்படும். சுகாதாரம் மற்றும் பிற திட்டங்கள் தொடர்பாக இந்தியா பெற்று வந்த நிதி பாதிக்கப்படும் என்பதால் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் அமெரிக்க நிதியில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொண்டு நிறுவன செயல்பாடுகள், சில அரசு செயல்பாடுகள் என்று எல்லாம் முடக்கப்பட்டு உள்ளன. USAID எனப்படும் இந்த நிதி காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தியா புகார்:
அமெரிக்காவின் இந்த நிதி இந்தியாவில் உள்ள 3ம் பாலின மருத்துவமனைகளுக்கு செலவு செய்யப்படுவதாக DOGE தலைவர் எலான் மஸ்க் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதாவது இந்தியாவில் இந்த நிதியை வைத்து 3ம் பாலினத்திற்கான மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டதாக மஸ்க் புகார் வைத்துள்ளார்.
டிரம்ப், மஸ்க் ஆகியோர் 2 பாலினங்கள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். 3ம் பாலினத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இந்த நிலையில்தான் இந்தியா இந்த நிதியை பயன்படுத்திய விதத்தை மஸ்க் கண்டித்துள்ளார்.
இந்தியாவிற்கான USAID நிதி:
USAID இந்தியாவில் பணிபுரியும் அதன் ஒப்பந்த திட்டங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
USAID இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல பணிகளை செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், USAID மூலம் இந்தியா $140 மில்லியனைப் பெற உள்ளது. கடந்த ஆண்டு இதே தொகையை பெற்றது. இதை எல்லாம் இந்தியா மொத்தமாக இழக்கும். அதாவது கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை இந்தியா இழக்கும்.
2023-24 நிதியாண்டில், USAID ஒதுக்கீடு மூலம் இந்தியாவின் அரசு மற்றும் சிவில் சமூக திட்டங்களுக்கு $6.8 மில்லியன், சுகாதாரத்திற்காக சுமார் $55 மில்லியன்; சுற்றுச்சூழலுக்கு $18 மில்லியன், மற்றும் சமூக உள்கட்டமைப்புக்கு $7.8 மில்லியன் என ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு அப்படியே முடக்கப்பட்டது. பெரும்பாலும் அமெரிக்காவின் நிதி உதவி இந்தியாவில் சுகாதார திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும்.
1990 முதல், USAID இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற இந்த திட்டங்கள் உதவி உள்ளன. 25,000 நிமோனியா இறப்புகள் மற்றும் 14,000 வயிற்றுப்போக்கு இறப்புகள் USAID நிதி மூலம் தடுக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
காசநோயை சிறப்பாகக் கண்டறியவும், குணப்படுத்தவும் மற்றும் தடுக்கவும் USAID இந்திய அரசுக்கு சிறப்பு நிதிகளை வழங்கி உள்ளது. இந்தியா காசநோயை தடுக்க இந்த நிதி பெரிய அளவில் உதவியது. இதைத்தான் அமெரிக்கா நிறுத்தி உள்ளது. எச்.ஐ.வி ஆபத்தில் உள்ள மக்களைத் தடுப்பதற்கும் பராமரிப்பதற்கும் கூட இந்த நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் 2007ஆம் ஆண்டிலிருந்து எய்ட்ஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை 32 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அமெரிக்காவின் நிதியே காரணம்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications