இனி EPFO விவரங்களை பெறுவது ரொம்ப எளிது.. வருகிறது Passbook Lite.. மத்திய அரசின் அதிரடி மூவ்.. கவனம்
டெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அதன் உறுப்பினர்களுக்குப் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புகள், வருங்கால வைப்பு நிதி (PF) விவரங்களை அணுகுவதையும், PF கணக்குகளை மாற்றுவதையும் எளிதாக்குகின்றன.
இத்தனை காலமாக EPFO பக்கத்தை அணுகுவது கடினமாக இருந்தது. அப்படியே உள்ளே சென்றாலும் பல சேவைகளை பெற முடியாது. பெரும்பாலும் EPFO பக்கம் இயங்காமல் இருக்கும். EPFO அவ்வளவு எளிதாக அணுக கூடியதாக இல்லை. இதைதான் மாற்றும் வகையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

முக்கியமாக, 'Passbook Lite' சேவை மூலம் PF இருப்பை விரைவாகச் சரிபார்க்க முடியும். அத்துடன், வேலை மாறுபவர்களுக்கு அத்தியாவசியமான 'Annexure K' பரிமாற்றச் சான்றிதழை ஆன்லைனில் அணுகும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, புகார்களைக் குறைத்து, PF தகவல்களைப் பெறுவதை எளிமையாக்கும்.
விரல் நுனியில் EPFO விவரங்கள்
இதுவரை, ஊழியர்கள் தங்கள் PF பங்களிப்புகள் மற்றும் திரும்பப் பெறும் விவரங்களைக் காண தனி Passbook போர்ட்டலில் உள்நுழைய வேண்டியிருந்தது. 'Passbook Lite' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒரே உள்நுழைவு மூலம் EPFO உறுப்பினர் போர்ட்டலிலேயே இந்தத் தகவலை நேரடியாகப் பெறலாம்.
EPFO- Passbook Lite-ன் முக்கியப் பயன்கள்
தனித்தனி போர்ட்டல்களுக்கு மாற வேண்டிய அவசியமின்றி ஒரே உள்நுழைவு மூலம் EPFO விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். உங்களிடம் எவ்வளவு பிஎப் உள்ளது, அதில் எவ்வளவு எடுத்துள்ளீர்கள், இனி எவ்வளவு எடுக்கலாம் , பென்ஷன் தொகை எவ்வளவு உள்ளது என்பதை எளிதாக இதில் அறிந்து கொள்ள முடியும். விரிவான பதிவுகளை விரும்புபவர்கள் பழைய Passbook தளத்தைப் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, ஒரு மென்பொருள் பொறியாளர் தனது புதிய நிறுவனத்தில் எத்தனை மாதத்திற்கான PF பங்களிப்பைச் செலுத்தியுள்ளாரா என்பதைச் சரிபார்க்க விரும்புகிறார். முன்பு, அவர் தனித்தனியாக Passbook போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். தற்போது, ஒரே உள்நுழைவு மூலம் அனைத்தையும் உடனடியாகச் சரிபார்த்து, நேரத்தையும் மன உளைச்சலையும் மிச்சப்படுத்தலாம்.
எளிமையாக்கப்பட்ட PF பரிமாற்றங்கள்
ஊழியர்கள் வேலையை மாற்றும்போது, அவர்களின் PF கணக்குகள் படிவம் 13 வழியாக ஆன்லைனில் மாற்றப்படும். பரிமாற்றச் சான்றிதழ் (Annexure K) முந்தைய PF அலுவலகத்தால் உருவாக்கப்பட்டு புதிய அலுவலகத்துடன் பகிரப்படும். ஆனால், இதுவரை ஊழியர்கள் அதைக் கோரினால்தான் பெற முடியும்.
தற்போது, EPFO ஆனது Annexure K-ஐ உறுப்பினர் போர்ட்டலிலிருந்து PDF வடிவத்தில் நேரடியாகப் பதிவிறக்கக் கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், PF பரிமாற்ற விண்ணப்பங்களின் நிலையைக் கண்காணிக்கலாம். புதிய கணக்கில் PF இருப்பு மற்றும் சேவை காலம் சரியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தலாம்.
மேலும், எதிர்கால வசதிகளுக்காக, குறிப்பாக EPS ஓய்வூதியக் கணக்கீடுகளுக்கு நிரந்தர டிஜிட்டல் பதிவைப் பராமரிக்கலாம்.
உதாரணமாக, டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வேலை மாற்றம் பெறும் ஒரு ஐடி ஊழியர், தனது PF இருப்பு புதிய கணக்கிற்குப் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, எந்த நேரத்திலும் உள்நுழைந்து Annexure K-ஐப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த இரண்டு மாற்றங்களும் 2.7 கோடிக்கும் அதிகமான EPFO பயனர்களுக்கு மேம்பட்ட கட்டுப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை வழங்குகின்றன.












Click it and Unblock the Notifications