நேற்று மகாராஷ்டிரா, டெல்லி.. இன்று மேற்கு வங்கம்! பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ அதிரடி
டெல்லி: மகாராஷ்டிராவில் 2 அமைச்சர்களை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கடந்த பிப்ரவை மாதம் கைது செய்த நிலையில் இன்று மேற்கு வங்க அமைச்சரை கைது செய்துள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கிறது.
2016 ஆம் ஆண்டு நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானதால் அமலாக்கத்துறையும் இந்த விசாரணையில் இறங்கியது.

கட்டுக்கட்டாக பணம்
அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது உதவியாளர் அர்பிதா முகெர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20 மொபைல் போன்கள், முக்கிய ஆவணங்கள், பதிவுகள், எலெக்டிரானிக் கருவுகள், வெளிநாட்டு நாணயங்கள், தங்கம் உள்ளிட்ட பல பொருட்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்

மகாராஷ்டிரா அமைச்சர்
உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக். ஷாரூக் கான் மகன் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டபோது மத்தியில் ஆளும் பாஜக அரசையும், போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரையும் கண்டித்து பேசியவர். இந்த சூழலில் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளிடம் குறைந்த விலையில் நிலம் வாங்கியதாகவும், பல கோடி மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டி இவரை பிப்ரவரி மாதம் கைது செய்தது அமலாக்கத்துறை. இதேபோல் மற்றொரு மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் மோசடி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

டெல்லி அமைச்சர்கள்
ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் சுகாதாரத்துறை சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை மோசடி வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். வகுக்கப்பட்டு உள்ள மதுபான கொள்கையில் தனியார் உற்பத்தியாளர்கள் லாபமடைந்து இருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளார். இதனை கண்டித்து உள்ள முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், "சாவர்க்கர்களின் சீடர்கள் அல்ல நாங்கள், பகத் சிங்கின் பிள்ளைகள்" என்று விமர்சித்து இருந்தார்.

சோனியா, ராகுல்
இதேபோல் நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் அண்மையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருக்கிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் வைத்து குறிவைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications