கேள்வி கேட்க லஞ்சம்: திரிணாமுல் மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறிக்க நாடாளுமன்ற குழு அதிரடி பரிந்துரை?
டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் பெற்ற குற்றசாட்டு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ராவின் லோக்சபா எம்.பி. பதவியை பறிக்க நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹூவா மொய்த்ரா. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர் மஹூவா மொய்த்ரா. மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார்.

நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக மஹூவா மொய்த்ரா பேசும் அனல் பேச்சுகள் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளாலும் வரவேற்கப்பட்டு கொண்டாடப்படக் கூடியது. அதே நேரத்தில் மஹூவா மொய்த்ராவை பரம எதிரியாக பாஜக எம்.பி.க்கள் எதிர்கொள்வர்.
இந்த பின்னணியில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிஷிகாந்த் எம்.பி.தான் பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம் எம்.பி.யை தீவிரவாதி என லோக்சபாவில் பகிரங்கமாக விமர்சித்தவர். நிஷிகாந்த் துபேவின் குற்றச்சாட்டுகளை மஹூவா மொய்த்ரா, ஹரிநந்தானி திட்டவட்டமாக மறுத்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. இந்த நெறிமுறைகள் குழுவில் மஹூவா மொய்த்ரா ஆஜரானதிலும் சர்ச்சைகள் வெடித்தன. தற்போது இந்த குழு 500 பக்க அறிக்கையை தயார் செய்திருக்கிறதாம்; இதில், மஹூவா மொய்த்ராவின் லோக்சபா எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த விவகாரத்தில் மஹூவா மொய்த்ரா, ஹரிநந்தானி இடையேயான பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தவும் மத்திய அரசுக்கு இந்த குழு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில் சிபிஐ, அமலாக்கப் பிரிவினர் அடுத்ததாக மஹூவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தக் கூடும். ஏற்கனவே சிபிஐ விசாரணையை மிக காட்டமாக விமர்சித்திருந்தார் மஹூவா மொய்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications