இதை மட்டும் செய்யலன்னா கஷ்டம் தான்.. EV வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு.. எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்
டெல்லி: பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அதுபோல புதைபடிவ எரிபொருட்களும் வரும் காலத்தில் பற்றாக்குறை ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே இதற்கு மாற்றாக மின்சாராத்தில் இயங்கக் கூடிய வாகனங்கள் மீது தற்போது கவனம் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்கள் எண்ணிக்கை பெருக தொடங்கிவிட்டது. இந்தியாவிலும் படிப்படியாக தற்போது மின்சாரத்தில் இயங்கக் கூடிய கார்கள் மற்றும் பைக்குகள் மீது மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் எலக்ட்ரிக் கார்களை தற்போது எல்லாம் சர்வ சாதாரணமாக காண முடிகிறது. மக்களும் எலக்ட்ரிக் கார்கள் மீது தங்கள் கவனத்தை திருப்பியுள்ளதையே இது காட்டுகிறது.

ஆனால், அதேவேளையில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை பெருகியிருப்பதால் புதிய சவாலும் ஏற்பட தொடங்கியுள்ளது. ஏனெனில், வாகனங்களுக்கான மின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால், வரும் காலத்தில் மின்சார உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் கடும் சவாலாக அமையும் என்று அத்துறையை சேர்ந்த பலரும் முன்வைக்கும் வாதமாக உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்பதே பெருகி வரும் தேவையை சமாளிக்க சரியான தீர்வாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 11 மாதங்களில் மட்டும் மின்சார வாகனங்களின் மின் நுகர்வு 3 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் 144.4 லட்சம் யூனிட்களை மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் மின் விநியோக நிறுவனம் (MSEDCL) என்று கூறியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதுமே மின்சார வாகன உற்பத்தி அதிகரித்துள்ளதால் சார்ஜிங் நிலையங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மின் தேவையும் கணிசமாக உயரும் என்று சார்ஜிங் நிலையங்கள் வைத்துள்ளவர்களும் கூறுகிறார்கள். இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மின் விநியோக நிறுவன அதிகாரி இது பற்றி கூறுகையில், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், சார்ஜிங் நிலையங்கள் வழியாக வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றுவதும் அதிகரித்து உள்ளது" என்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு 4,640 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1.22 லட்சமாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மின்சார வாகனங்கள் ஓடுகின்றன. தற்போது பேட்டரிகளின் விலை குறைந்து இருப்பதாலும் மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை உயரும் என்று அத்துறை சொல்லும் தகவலாக உள்ளது.
இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி இந்தியாவில் குறைவாக உள்ளது. அதனால் மின்சார வாகனங்களின் விற்பனையும் குறைகிறது என புகார்கள் வந்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மின்சார வாகனம் சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான வரைவுக் கொள்கையை நிதி ஆயோக் தயாரித்து ரயில்வேயிடம் வழங்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications